அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு சிறு சிறு தாக்குதலாகப் பல முறை அமெரிக்க ராணுவம் ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் ஈரான் இதற்குப் பதிலடி கொடுக்காமல் தொடர்ந்து அமைதியாக இருந்த நிலையில் இன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது மூலம் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ராணுவம் தெற்கு ஈரானில் இருக்கும் சிரிக் என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டெலிகாம் டவர் மீது தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலை முன்கூட்டிய காட்டும் ரேடார் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் ராணுவம் செப்டம்பர் மாத தாக்குதலுக்கு பிறகு, வளைகுடா நாட்டில் இருக்கும் அமெரிக்க ராணுவ கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இன்றைய பதில் தாக்குதல் குறித்து ஈரான் நாட்டின் IRGC விமானப் படை வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற அமெரிக்க ராணுவம் சிரிக் பகுதியில் இன்று நடத்திய தாக்குதல் போன்று அத்துமீறல்கள் நடந்தால் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும், இதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் போர்!
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில், ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கு நான் தயங்க மாட்டேன், ஏன் இப்போதே போரை நான் துவங்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் நிலைமை நம்முடைய நிலைப்பாட்டில் இருந்து வேறு திசைக்கு சென்றால், மீண்டும் தாக்குதல் நடத்துவேன் என்று கூறினார்.
கச்சா எண்ணெய் விலை
இன்று நடந்த திடீர் இருமுனை தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் விலை தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.10 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 96.87 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 0.74 சதவீதம் உயர்ந்து 89.40 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications
