வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பலரும் தற்போது தென்னிந்தியாவில் மளிகை கடை, உணவகங்கள், சலூன்கள் தங்கம் விடுதிகள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு கேரளாவில் மட்டும் வெளிமாநிலத்தை சேர்ந்த 35 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து ஓராண்டுக்கு 17,000 கோடியை தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்கிறது ஒரு தகவல்.
மேற்குவங்கம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கேரளாவில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களுடைய சம்பாத்தியத்தை குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக மணி டிரான்ஸ்பர் செய்யும் கடைகளில் குவிந்து விடுகிறார்கள். பெரும்பாவ்பூர் பகுதிகளில் இருக்கும் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்களின் கூட்டம் தான் காணப்படுகிறது.

வட இந்தியர்கள் குடும்பத்தினருக்கு பணத்தை ட்ரான்ஸ்பர் செய்வதற்காகவே பல்வேறு கடைகள் இங்கே பிரத்தியேகமாக இயங்குகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கே ஒவ்வொரு கடையிலும் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்புகிறார்கள்.
ஒரு நபர் குறைந்தபட்சம் 1500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை அனுப்பி வைக்கிறார்களாம். இவ்வாறு அனுப்பப்படும் பணத்திற்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 12 ரூபாயை இந்த கடைகள் கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கேரளாவில் பணிபுரியக்கூடிய வட இந்தியர்கள் தங்கள் வசம் 3 ஆயிரம் ரூபாய் சேர்ந்து விட்டாலே உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிடுவார்களாம்.
இவ்வாறு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்காக மட்டும் பெரும்பாவூரில் 30 கடைகள் செயல்படுகின்றன. தற்போது கேரளாவில் இது வளர்ந்து வரும் தொழிலாகவே இருக்கிறதான். ஒரு ஆய்வில் கேரளாவில் ஓராண்டுக்கு சுமார் 17,000 கோடி ரூபாய் இவ்வாறு புலம் பெயர்ந்த பணியாளர்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் தற்போது 35 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு ஆண்டுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டிலும் வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது. இவர்கள் இல்லை என்றால் கேரளாவில் கட்டுமான பணிகள், தோட்ட வேலைகள், தங்கும் விடுதிகள், முடி திருத்தும் நிலையங்கள் ஆகியவை ஸ்தம்பித்து போய்விடும் என்ற நிலை உண்டாகியுள்ளதாம்.
இவ்வாறு இங்கே வருமானமீட்டக்கூடிய வெளிமாநிலத்தவர்கள் ஒரு ஆண்டுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாயை கேரளாவிலேயே செலவு செய்கிறார்கள். இப்படி கேரளாவில் வந்து பணிபுரியும் நபர்களில் 36 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 34 சதவீதம் பேரும், 31 முதல் 40 வயது உட்பட்டவர்கள் 57 சதவீதம் பேரும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8% பேரும் இருக்கின்றனர்.
இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்களின் விகிதம் 40.7% ஆகும் இவ்வாறு கேரளாவில் வந்து பணி புரிபவர்களில் 56 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் 43 சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications