ஈரோடு: தமிழ்நாட்டை சேர்ந்த பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மில்கி மிஸ்ட் தேசிய அளவில் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மில்கி மிஸ்ட் நிறுவனம்.
பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் மில்கி மிஸ்ட் நிறுவன பொருட்கள் மிகவும் புகழ் பெற்றவையாக இருக்கின்றன. இந்த நிலையில் தங்களுடைய நிறுவனத்தை தேசிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரத்னம் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தங்களுடைய நிறுவனம் தொடர்ந்து பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மீது கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் செய்து விற்பனை செய்வது மட்டுமே எங்களுடைய இலக்கு கிடையாது, பாலில் இருந்து மற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதை தான் நாங்கள் ஆரம்ப முதல் பின்பற்றி வருகிறோம், அதனை தொடர்வோம் எனக் கூறியுள்ளார். தங்களுடைய நிறுவனம் கடந்த ஆண்டு தான் சாக்லேட் தயாரிப்புக்கான ஒரு ஆலையை நிறுவியதாகவும் தங்கள் நிறுவன சாக்லெட்டுகள் தற்போது பல்வேறு கடைகளில் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய உற்பத்தி ஆலை 1.2 மில்லியன் லிட்டர்கள் பாலில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் லிட்டர் பாலில் இருந்து பல்வேறு பொருட்களாக மாற்றும் திறன் கொண்ட ஆலையாக மேம்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். தற்போதைக்கு தங்களது நிறுவனம் பிராண்ட் பில்டிங்கில் கவனம் செலுத்துவதாகவும் கூடிய விரைவில் பல்வேறு இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தங்கள் நிறுவனத்திற்கு 2000 விநியோகஸ்தர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் தங்களுடைய இருப்பு வலுவாக இருக்கிறது, மேற்கு மற்றும் வட இந்திய பகுதிகளை நோக்கி நாங்கள் தற்போது பயணம் செய்கிறோம் எனக் கூறியுள்ளார். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என அவர் கூறியுள்ளார்.
மில்கி மிஸ்ட் நிறுவனம் தயிர், வெண்ணெய், சீஸ் மற்றும் பன்னீர் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. கூடுதலாக ஐஸ்கிரீம் தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறது. அடுத்ததாக மில்க் ஷேக், யோகர்ட் ஆகியவற்றை தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறியுள்ள அவர், நிறுவனத்தின் வருமானம் 1900 கோடி என்ற உச்சத்தை எட்டியதாகவும் நடப்பாண்டில் அதனை 2400 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications