மில்கி மிஸ்ட் நிறுவனம் பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதோடு இல்லாமல் இந்நிறுவனம் ஒரு புத்திசாலித்தனமான வணிக யோசனையை செய்து வருகிறது. அதுதான் அவர்களின் போக்குவரத்து முறை. இவர்கள் வெறும் பால் பொருட்களை மட்டும் கொண்டு செல்வது கிடையாது. அதோடு வேறு சில விஷயங்களையும் செய்கின்றனர். இதன் மூலமாகவும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
ஒரு நிறுவனம் தனது பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல லாரிகளை பயன்படுத்தும். பொருட்களெல்லாம் டெலிவரி செய்யப்பட்ட பிறகு லாரிகள் வெறுமையாக திரும்பும். இதனால் லாரி ஓட்டுவதற்கான செலவுகள் அதிகமாகலாம். இதை ஒரு வாய்ப்பாக மில்கி மிஸ்ட் நிறுவனம் பயன்படுத்துகிறது.

உதாரணமாக மில்கி மிஸ்ட் நிறுவனம், ஈரோட்டில் உள்ள தங்கள் தொழிற்சாலையிலிருந்து பால் பொருட்களை அசாமிற்கு அனுப்புகிறது என்று வைத்துக் கொள்வோம். அஸ்ஸாமில் அனைத்து பொருட்களையும் கடைகளில் இறக்கிய பிறகு லாரிகளை வெறுமையாக திருப்பி அனுப்புவதற்கு பதிலாக அங்கு விளையும் சீரக சம்பா போன்ற அரிசியை ஏற்றிக் கொண்டு வருகிறது. அங்கிருந்து கொண்டு வந்த அரிசியை தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளுக்கு அனுப்புகிறது. இப்படி செய்வதால் நிறுவனத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. எம்டியாக லாரிகளை அனுப்புவதற்கு பதிலாக இதையும் ஒரு வருமான ஆதாரமாக நிறுவனம் பயன்படுத்துகிறது. இதனால் நிறுவனத்திற்கு 4 முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
வேகமான டெலிவரி: தங்கள் பொருட்களை பிற ஊர்களுக்கு சப்ளை செய்து விட்டு திரும்பும் போது அங்கிருந்த பொருட்களை கொண்டு வருவதனால் தமிழ்நாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சீக்கிரமே தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் கிடைக்கிறது.
இலவச விளம்பரம்: அனைத்து பகுதிகளுக்கும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் லாரிகள் செல்வதால் இலவசமாகவே அவர்களுக்கு மார்க்கெட்டிங் நடக்கிறது. மில்கி மிஸ்ட் என்ற பெயரில் டிரக்குகள் ஓடும்போது பலரும் அதை திரும்பி பார்க்க கூடும். இதனால் மக்கள் மனதில் இந்த பிராண்டின் பெயர் பதியும்.
மற்ற நிறுவனங்களை நம்ப வேண்டியதில்லை: மற்ற நிறுவனங்களைப் போல பொருட்களை கொண்டு செல்வதற்கு வேறு நிறுவனங்களின் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுடைய லாரியையே பயன்படுத்தி சப்ளை செய்யலாம்.
செலவு மிச்சம்: லாரிகள் வெறுமையாக திரும்பாமல் பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து போக்குவரத்து செலவு சமன் செய்யப்படும். ஒரு முறை அசாம் சென்று வரும் வழியில் வேறு ஒரு பொருளை கொண்டு வரும் போது பணம் மிச்சமாகும்.
மில்க் மிஸ்ட் நிறுவனம் இதற்காக சுமார் 100 பாரத் பென்ஸ் லாரிகளை பயன்படுத்துகிறது. அவற்றில் ஐஓடி ட்ராக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ராக்கிங் வசதியின் மூலம் லாரிகள் எந்த இடத்தில் இருக்கிறது? எந்தெந்த பொருட்களைக் கொண்டு செல்கிறது? எங்கிருந்து வருகிறது? என்ற விவரங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சேர்மேன் சதீஷ்குமார் தங்களிடம் 270 பாரத் பென்ஸ் ட்ரக்குகள் இருப்பதாகவும், தங்கள் நிறுவனம் ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ்-இல் ஸ்பெஷலிஸ்ட் என்றும் கூறியிருக்கிறார்.
ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் என்பது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டு மீண்டும் ட்ரக்குகளை அந்த இடத்தில் இருந்து வேறு பொருட்களோடு கொண்டு வருவதை குறிக்கிறது. இதனால் ஒரு நிறுவனத்திற்கு செலவு குறையும், லாபமும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications