ஈரோடு: இந்தியாவின் புகழ்பெற்ற பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கும் மில்கி மிஸ்ட் நிறுவனம் இந்த இடத்தை அடைவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு காரணமானவர் சதீஷ் குமார்..
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். அவரது தந்தை ஒரு விவசாயி மற்றும் பால் விற்பனை தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். தன்னுடைய 17ஆவது வயதில் படிப்பை பாதியில் விடுத்த சதீஷ்குமார் தன்னுடைய தந்தையின் தொழிலை கையில் எடுத்தார்.

அந்த சமயத்தில் பால் விற்பனை என்பது மிக சவாலாக இருந்தது. ஏனெனில் இரண்டு நாட்களில் பால் கெட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தால் கூட அதில் கிடைக்கக்கூடிய லாபம் வெறும் 3% தான்.
அதுமட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களோடு இவர்கள் போட்டி போட வேண்டியிருந்தது. அப்போதுதான் சதீஷ்குமாருக்கு ஒரு ஐடியா தோன்றியது பாலை மதிப்புக் கூட்டிய பொருளாக விற்பனை செய்யும் போது அதன் பயன்பாட்டு காலமும் அதிகம் அதன் லாபமும் அதிகம் என்பதை உணர்ந்தார். அப்படி தோன்றியதுதான் மில்கி மிஸ்ட் நிறுவனம்.
பன்னீர் மற்றும் நெய் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் யோசனை சதீஷ்குமாருக்கு பிறந்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 35 சதவிகித லாபம் கிடைக்கும் என்பது மட்டுமில்லாமல் இந்த பொருட்கள் 9 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
இப்படி 1992 ஆம் ஆண்டு சதீஷ்குமார் வெற்றிகரமாக மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனத்தை தொடங்கினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறுவனத்தை இவர் செயல்படுத்தி வந்தார். அப்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது.
குறிப்பாக பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்காக சதீஷ்குமார் லாயல்டி பார்ட்னர் ப்ரோக்ராம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் விவசாயிகள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது, மாடுகளை பராமரிப்பதற்கான உதவிகள், 24 மணி நேர அவசர உதவி மையம் என பல வசதிகளை செய்து கொடுத்தார்.மாடுகளை பராமரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு இவர் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
படிப்படியாக முன்னேறி 2008 ஆம் ஆண்டில் 13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியது. சித்தோடில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இவர் ஆலையை நிறுவி ஒரு நாளைக்கு ஒரு மெட்ரிக் டன் பன்னீரை உற்பத்தி செய்தார்.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட லாரிகளை வாங்கினார், பால் பொருட்கள் கெட்டுப் போகாத வகையில் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தினார். இப்படி நவீன வசதிகளோடு வளர்ந்த மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் 408 கோடி மதிப்புள்ள நிறுவனம் என உயர்ந்தது.
நிறுவனத்தின் பன்னீர் உற்பத்தியும் ஒரு நாளைக்கு மூன்று மெட்ரிக் டன் என அதிகரித்தது. இதனை அடுத்து தயிர், சீஸ் உள்ளிட்ட பொருட்களையும் இவர் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் 121 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவானது. விற்பனை அதிகரித்ததால் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆலையை விரிவுபடுத்தினார்.
2017 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் லிட்டர் பாலை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் ஆலையாக இது மாறியது. 55 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 1200 மையங்கள் மூலம் இவர் பாலை கொள்முதல் செய்தார். இப்படி 2020 ஆம் ஆண்டு 750 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மில்கி மிஸ்ட் உருவானது.
ரெடி டு ஈட் சப்பாத்தி மற்றும் பரோட்டா உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியது மில்கி மிஸ்ட் நிறுவனம். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாறியது. இதன் வருவாய் 1016 கோடியாக உயர்ந்தது. தற்போது மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனத்தின் வருவாய் 2000 கோடி ரூபாய் ஆகும்.
ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 65 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது. 16 வயதில் தன்னுடைய பள்ளி படிப்பில் இருந்து வெளியேறியவர்தான் தற்போது மிகப்பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரராக இருக்கிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications