ஈரோடு: தமிழகத்தில் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட், ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ரூ.1700 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பால் உற்பத்தித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மில்கி மிஸ்ட் நிறுவனம், தற்போதுள்ள உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய சந்தையில், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியில் இந்த புதிய முதலீட்டையும், தொழிற்சாலையும் அமைக்க உள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13, 2024) ஈரோடு மாவட்டத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1,777 கோடி மதிப்பிலான முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மில்கி மிஸ்ட் சதீஷ்குமார் பலருக்கும் இன்ஸ்பிரேஷன், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து, தனது தந்தையின் பால் விற்பனை தொழிலிலும் ஈடுபட முடிவு செய்து தன்னுடைய 17 வயதில் படிப்பைப் பாதியில் விடுத்து தந்தையின் தொழிலைக் கையில் எடுத்தார்.
17 வயது சிறுவனின் முயற்சி இன்று 20000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு 1500 முதல் 2000 கோடி ரூபாய் வரையிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு உள்ளார் சதீஷ்குமார். பால் மற்றும் பால் பொருட்கள் பிரிவில் இயங்கும் ஹட்சன் அக்ரோ, ஹெரிடேஜ், பராக் மில்க், டொட்லா டெய்ரி போன்ற நிறுவனங்களின் பாதையில் மில்கி மிஸ்ட் இறங்க உள்ளது.
ஐபிஓ வெளியிடுவதாக ஜூலை மாதம் தகவல் வெளியான நிலையில் மில்கி மிஸ்ட், ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ரூ.1700 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம் தொழில் வளர்ச்சியாக்க ஒரு பகுதியாகவே இருந்தாலும், இன்று வரையில் அதன் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை. கல்வி துறை, டெக்ஸ்டைல், விவசாயம் என பல துறையில் சிறந்து விளங்கும் ஈரோடு மாவட்டம் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையக் கட்டாயம் அரசின் பெரிய வளர்ச்சி திட்டம் அவசியமாக உள்ளது.
ஈராடு மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் விர்வாக்கத்தின் மூலம் தனியார் துறை முதலீடுகளும் உயிர்ப்புடன் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய தொழிற்சாலை மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், தமிழகத்தில் பால் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், ஏற்றுமதி வாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும்.
இந்த முதலீட்டின் மூலம் மில்கி மிஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பில் ஈடுப்படும் மக்களும் நன்மை அடைவார்கள். மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் இந்த முதலீடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications