ஊழியர்கள் பணிநீக்கம்.. கோடிகளில் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள்.. என்னடா நடக்குது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல இந்தியாவில் அடுத்தடுத்து நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதிமாக மறுசீரமைப்பு நடவடிக்கை பெயரில் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வருகிறது.

 

குறிப்பாக முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர், இதோடு பெரிய ஐடி சேவை நிறுவனத்தில் வேரியபிள் பே குறைப்பதன் மூலம் ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதே காலகட்டத்தில் இந்திய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளின் சம்பளம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்து உள்ளது.

இந்தியா பொருளாதாரம்

இந்தியா பொருளாதாரம்

இந்தியா பொருளாதாரம் பணவீக்கம், சர்வதேச பிரச்சனை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுச் சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரையில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்த நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் உயர் அதிகாரிகளின் சம்பளம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

மில்லியன் டாலர் சம்பளம்

மில்லியன் டாலர் சம்பளம்

இந்தியாவில் மில்லியன் டாலர் அதாவது 7.8 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் சிஇஓ மற்றும் சிஎக்ஸ்ஓ அதிகாரிகளின் எண்ணிக்கை 2022 ஆம் நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

7.8 கோடி ரூபாய் சம்பளம்
 

7.8 கோடி ரூபாய் சம்பளம்

2022 ஆம் ஆண்டில் இந்த எலைட் கிளப் அதாவது 7.8 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வாங்கும் பட்டியலில் புதிதாக 46 பேர் இணைந்தது மூலம் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2021ல் 125 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எலைட் கிளப்

எலைட் கிளப்

இதன் மூலம் சி சூட் பிரிவில் இருக்கும் எலைட் கிளப்-ல் இருக்கும் உயர் அதிகாரிகளின் ொத்த சம்பளம் அளவு 2022ல் 55 சதவீதம் அதிகரித்து 3,957 கோடி ரூபாயாக உள்ளது மட்டும் அல்லாமல் சராசரி சம்பள அளவு 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

JSW சஜ்ஜன் ஜிண்டால்

JSW சஜ்ஜன் ஜிண்டால்

இந்த எலைட் கிளப்-ல் முதல் இடத்தில் இருப்பது JSW ஸ்டீல் மற்றும் JSW எனர்ஜி நிறுவனத்தின் தலைவரான சஜ்ஜன் ஜிண்டால் 2022 ஆம் நிதியாண்டில் 146 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளது. 2021ல் இதன் அளவு வெறும் 85 கோடி ரூபாயாக இருந்தது. இந்தச் சம்பளத்தில் பெரும் தொகை லாப அளவுகளில் கிடைத்த கமிஷன் தான். இதன் அளவு மட்டும் 122 கோடி ரூபாய்.

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியலில் முதல் இடத்தைச் சஜ்ஜன் ஜிண்டால் பிடித்த நிலையில் விப்ரோவின் தியரி டெலாபோர்ட், இன்போசி நிறுவனத்தின் சலில் பரேக், ஹீரோ மோட்டோகார்ப்பின் பவன் முஞ்சால், எல்&டியின் எஸ் என் சுப்ரமணியன் மற்றும் டெல்லிவேரியின் சந்தீப் குமார் பராசியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 சன் டிவி காவேரி கலாநிதி

சன் டிவி காவேரி கலாநிதி

டாப் 10 பட்டியலில் சன் டிவி நெட்லவொர்க்-ன் காவேரி கலாநிதி இடம்பெற்றுள்ள ஓரே பெண் தலைவர் ஆவார். இதேபோல் 7.8 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்குவோர் மொத்த பட்டியில் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் சம்பளத்தில் பெரும் பகுதி பங்குகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் ரூபாய் மதிப்பு இக்காலகட்டத்தில் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளதால் இதன் மதிப்பு குறைந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் சராசரி சம்பள அளவும் சரி, மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கையும் சரி சரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Million dollar salary CEO / CXO club added 46 new members; average salary at Rs 23 crore

Million dollar salary CEO / CXO club added 46 new members; average salary at Rs 23 crore
Story first published: Monday, December 5, 2022, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X