இன்ஸ்டாகிராம் திறந்தாலே காஸ்ட்லி கார், ஆடம்பர வாழ்க்கை, ஆடம்பரமான லைப்ஸ்டைல் என போட்டோக்கள் இஷ்டத்திற்கு வருகிறது. பல நேரம் என்னடா இது என பலரும் சலித்துக்கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். இங்கு ஒரு பெண் பணக்கார கணவன் கிடைத்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று வீடியோ போட்டு உள்ளார்.
லிண்டா ஆண்ட்ரேட் என்ற 24 வயதான சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சர் ஒருவர் தான் கோடீஸ்வரனின் மனைவி ஆக இருப்பதை தனது பாலோவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக.. கோடீஸ்வரனின் மனைவியாக தன்னுடைய ஆடம்பரமான வாழ்க்கை முறையை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அப்படி பார்த்தா எங்க ஊர் நீதா அம்பானி, ஈஷா அம்பானி எல்லாம் வீடியோ போட்டா யாராலும் தாங்க முடியாது என கூறினாலும் 24 வயதான லிண்டா ஆண்ட்ரேட் வாழ்க்கை பல இளம் பெண்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.

லிண்டா ஆண்ட்ரேட் தன்னை ஒகு ஒரிஜினல் துபாய் ஹவுஸ்வைஃப் என்று முத்திரை குத்திக் கொண்டு உள்ளார். இவருக்கு டிக்டாக்-ல் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களும் உள்ளனர்.
லிண்டா ஆண்ட்ரேட்-வின் போட்டோ மற்றும் வீடியோ பலரை வியப்பில் ஆழ்த்தினாலும், பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பலர் லிண்டா ஆண்ட்ரேட்-வை இதுப்போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் ஒரு சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சர் ஆக லிண்டா ஆண்ட்ரேட் பதிவிட்ட வீடியோ, மற்றும் புகைப்படம் செம ஹிட்.
லிண்டா ஆண்ட்ரேட் ஜூன் மாதம் பதிவிட்ட வீடியோவில் ஒரு மில்லியனர் மனைவியாக ஒரு நாளில் எவ்வளவு செலவு செய்கிறேன் என்ற கேப்ஷன் உடன் ஒரு பதிவிட்ட வீடியோவில் 6 லட்சம் ரூபாய்க்கும் 2 ஷனல் பேக், மாலில் சுற்ற வாடகை கார், மொத்தம் ஒரு நாளுக்கு 16,540 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13.7 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை செலவு செய்துள்ளார். இந்த வீடியோ-வை மட்டுமே சுமார் 1.1 கோடி பேர் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications