முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான மைண்ட்ட்ரீ, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 87.9% லாபம் அதிகரித்து, 253.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது 19.1% அதிகரித்தும் காணப்படுகிறது.
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட பெரியளவில் மாற்றம் இல்லாமல், 1,926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மைண்ட்ட்ரீ வருவாய்
இதே டாலர் வருவாய் 261 மில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிலையான நாணய அடிப்படையில் 3.1% அதிகரித்துள்ளது.
தரவு நிறுவனமான சென்ட்ரம் புரோக்கிங் வரிக்கு பிந்தைய லாபத்தினை 231.7 கோடி ரூபாயாக மதிப்பிட்டுள்ளது. இது கடந்த காலாண்டினை 8.8% அதிகரித்தும், இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 71.6% அதிகரித்தும் காணப்படுகிறது.
நிகர விற்பனை
இதே ரூபாய் அடிப்படையில், நிகர விற்பனை முந்தைய காலாண்டினை விட 1.6% அதிகரித்தும் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டினை விட 1.6% அதிகரித்து, 1944.5 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் இரண்டாவது காலாண்டில் 130 ஊழியர்கள் குறைந்து, 21,827 பேராக குறைந்துள்ளனர்.
இடைக்கால டிவிடெண்ட்
மைண்ட்ட்ரீ நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 7.50 ரூபாயினை அறிவித்துள்ளது. பயணம், போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது. கடந்த காலாண்டு நெருக்கடியான காலாண்டாக இருந்தாலும், எங்களால் நல்ல வளர்ச்சி வேகத்தினை நாங்கள் தொடர்ந்து கண்டு வருகிறோம்.
வருவாயில் அமெரிக்கா முக்கிய பங்கு
இந்த காலாண்டில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 303 மில்லியன் டாலர்களாகும். இதில் அமெரிக்கா வருவாயின் பங்கு மதிப்பானது மொத்த வருவாயில் 77.4 சதவீதம் பங்கு வகித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 73.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும் ஐரோப்பா மற்றும் அயர்லாந்து ஆகியவை கடந்த ஆண்டை விட வீழ்ச்சியைக் கண்டன.
பங்கு விலை வீழ்ச்சி
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து, சம்பள உயர்வு இருக்கும் என்றும் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக மைண்ட் ட்ரீ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 7% குறைந்து, 1,331.20 ரூபாயாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications