தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்காவை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பயணித்து வருகிறது.
இந்த இலக்கை அடையத் தமிழ்நாட்டிற்கு உற்பத்தித் துறை என்ற ஒரு இன்ஜின் மட்டும் போதாது, சேவைத் துறை என்ற டர்போ பூஸ்டர் உடன் கூடிய ஹைய் டெக் இன்ஜினும் வேண்டும். உற்பத்தித் துறையைக் காட்டிலும் சேவைத் துறை மூலம் வேகமாக வளர முடியும், ஆனால் ஏற்றுமதி, அதிகப்படியான வேலைவாய்ப்பு, அனைத்து தரப்பினருக்குமான வாழ்விடம் ஆகியவற்றை உற்பத்தித் துறையால் மட்டுமே சாத்தியம்.

தமிழ்நாட்டின் உற்பத்தி துறையை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் மேம்படுத்த சிப்காட், சிட்கோ, சிறப்பு பொருளாதார பகுதி என பல தளம் மூலம் மேம்படுத்தும் வேளையில், சேவைத் துறையை 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் வளர்க மினி டைடல் பார்க் திட்டம் சிறப்பாக ஆயுதமாக இருக்கும் வேளையில்.
வட தமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஸ்டாலின் அரசு தனது வெற்றிகரமான மினி டைடல் பார்க் திட்டத்தைக் கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி போன்று நாகப்பட்டினமும் ஐடி மற்றும் டெக் துறையில் வேகமாக வளர்ச்சி அடையும் வாய்ப்பை பெறும்.
நாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் இப்புதிய மினி டைடல் பார்க்ல் சுமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் (IT/ITES) துறையில் 600 பணியிடங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களில் டைடல் பூங்காக்களை அமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, மத்திய மண்டலத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும்.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, 600 புதிய பணியிடங்களை உருவாக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். சமீபத்தில் திறக்கப்பட்ட தஞ்சாவூர், சேலம் ஆகிய நகரங்களில் திறக்கப்பட்ட மினி டைடல் பார்க் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல் நாகப்பட்டின மக்களுக்கும் இது ஜாக்பாட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களுக்கு பெயர் பெற்ற ஒரு பகுதியாக இருந்தாலும், இந்த புதிய மினி டைடல் பூங்காவின் மூலம், தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications