இந்தியாவில் ரூ.1 லட்சம் பர்சனல் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை? அட இது போதுமா?

பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து தங்களுக்கு வரும் வருமானம் போதாமல் கடன் பெறுவது, நகைகளை வைத்து பணம் பெறுவது என மக்கள் அவசரத் தேவைகளை ஈடுகட்ட பல வழிகளைத் தேடுகின்றனர். சிலர் பர்சனல் லோன்களை நாடுகின்றனர். ஆனால் பர்சனல் லோன் பெற வேண்டுமானால் அதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் முக்கியம். கிரெடிட் ஸ்கோரை பொறுத்து தான் உங்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என கடன் வழங்குனர்கள் முடிவு செய்வார்கள்.

இந்தப் பதிவில் ரூ.1 லட்சம் பர்சனல் லோன் பெற வேண்டுமானால், அதற்கு எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இந்த எண் 600 முதல் 900 வரையில் இருக்கும். கிரெடிட் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் அவை நல்ல கிரெடிட் ஸ்கோராகக் கருதப்படும். இந்த ஒரு ஸ்கோரை வைத்தே நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடன்களின் வரலாறு, அதை எப்படி செலுத்தி இருக்கிறீர்கள்? சரிவர திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்களா? ஏதேனும் தவணை தவறவிடப்பட்டுள்ளதா? கடன் நிர்வாகம் எப்படி இருந்தது? என அனைத்து விவரங்களையும் வங்கிகள் கண்டுபிடித்து விடும்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் பர்சனல் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை? அட இது போதுமா?

கிரெடிட் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் தாராளமாக கடன் பெறலாம். அதுவே அதற்கும் கீழ் இருந்தால் உங்களுடைய நிதி நிர்வாகம் சரி இருக்காது? என வங்கிகள் நினைக்கத் தொடங்கி விடும். இதனால் கடன் பெறும் செயல்முறை சிக்கலாகலாம்.

நியோக்ரெட்டின் இணை நிறுவனர் திரு. ரோஹித் ரெஜியின் கருத்துப்படி, கடன் வழங்குபவர்கள் ரூ.1 லட்சம் பர்சனல் லோனை அங்கீகரிக்க 700 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுடைய கடன் தகுதி மேம்படும். ஆனால் சில கடன் வழங்குனர்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், சில கடுமையான விதிமுறைகளுடன் கடன் வழங்குகின்றனர் என்று கூறியுள்ளார்.

பர்சனல் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை?: இந்தியாவில் பர்சனல் லோன், ஹோம் லோன், எஜுகேஷன் லோன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த கடன்கள், கடன் பெறுபவர்களுக்கு அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரிதும் உதவி வருகிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சை, சாலை விபத்து போன்றவற்றிற்காகவும் மக்கள் கடன் பெறுகின்றனர்.

இது போன்ற கடன்களை வழங்குவதற்கு முன் முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சில அளவீடுகளை சரி பார்க்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த கிரெடிட் ஸ்கோர். அதோடு கடந்த கால கடன் வரலாறு, கடன் மற்றும் வருமான விகிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தும் கடன் வழங்கப்படுகிறது.

எனவே கடன் பெறுபவர்கள், ஏற்கனவே கடன் பெற்றவர்கள் சரிவர கடனை திருப்பி செலுத்தினால் கிரெடிட் ஸ்கோரில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதனால் எப்போது தேவை என்றாலும் எளிதில் கடன் பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+