வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பட்ஜெட் அறிவிப்பின்போது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் வரி சலுகைகளில் மாற்றங்கள், வரிவிலக்கு வரம்புகள், நிதி உதவி அதிகரிப்பு குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
அதேபோல இந்த முறை பட்ஜெட்டில் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் சில மாற்றங்களை எதிர்பார்த்து ஓய்வூதியர்கள் காத்திருக்கின்றனர். இந்த முறை APY திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை ரூ. 10,000-ஆக அரசாங்கம் இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இறுதி கட்ட ஒப்புதலில் இருக்கும் APY திட்டத்தின் கோரிக்கை, இந்த முறை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்தத் திட்டம் இந்தியாவில் நிதி பாதுகாப்பை நம்பியிருக்கும் ஏராளமானோருக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?: 2015-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டம் ஏழைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் போன்ற நபர்களுக்கு வருமான பாதுகாப்பை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட அடல் ஓய்வூதிய திட்டம், பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு ஒருவருக்கு நிதி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங்களில் ஒன்றாகும்.
தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு பிறகு உறுப்பினர்களின் பங்களிப்பின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. இந்த தொகையை தான் 10,000 ரூபாயாக இரட்டிப்பாக்க தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தத் திட்டத்தில் 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் 56 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 21 பிராந்திய மொழிகளில் APY திட்டத்தின் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறது.
இந்த திட்டம் தற்போதுள்ள உறுப்பினர்களை குறைந்தபட்சமாக 42 ரூபாயிலிருந்து பங்களிப்பு செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒருவர் எளிதில் மாதாந்திர பென்ஷனை பெறலாம். 18 வயதில் நிரம்பிய யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயது முதல் 40 வயதுடையவர்கள், ரூ.42 முதல் மாதத்திற்கு ரூ.1454 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications