LPG இறக்குமதிக்கு முற்றுப்புள்ளியா? ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மோடி கொடுத்த டார்கெட்.. ரிலையன்ஸ் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரலாற்றில் முதல் முறையாக நாட்டிலுள்ள ஒவ்வொரு பொதுத்துறை மற்றும் தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் எல்பிஜி உற்பத்தி செய்ய நிலையான இலக்கு வைத்துள்ளது.

ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் என்ற அச்சம் தொடர்ந்து உருவாகி வரும் வேளையில் தற்போது வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு காரண துவங்கியுள்ளது. இதனால் அடுத்த என்ன நடக்கும் என்பது பெரும் கேள்வியாக இருக்கும் வேளையில் மத்திய அரசு அனைத்து சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் எல்பிஜி உற்பத்திக்கான டார்கெட்-ஐ வைத்துள்ளது.

LPG இறக்குமதிக்கு முற்றுப்புள்ளியா? ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மோடி கொடுத்த டார்கெட்.. ரிலையன்ஸ் அதிர்ச்சி!

இதன் மூலம் அவசர காலத்தில் மட்டும் அல்லாமல் இறக்குமதி செலவுகளை குறைக்கும் வகையில் போதுமான இருப்பை இந்தியாவிலேலேயே உருக்கும் பொருட்டு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், இந்தியாவில் இருக்கும் 21 சுத்திகரிப்பு ஆலை மற்றும் அப்ஸ்ட்ரீம் நிறுவனங்களுக்கு தனித்தனியாக அதன் கட்டமைப்புகள் அளவுக்கு ஏற்ப எல்பிஜி உற்பத்தி இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு நாளுக்கு 63,810 டன் எல்பிஜி எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும் என மத்திய பெட்ரோலியம் துறை கணக்கிட்டு உள்ளது. இது 2026ஆம் ஆண்டின் உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் இரு மடங்கு அதிகம், அதேபோல் இந்தியாவின் தினசரி நுகர்வு அளவில் இது சுமார் 70 சதவீதமாகும்.

இதேபோல் உற்பத்தி அளவுக்கு தேவையின் அடிப்படையில் மாற்றப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 63,810 டன் எல்பிஜி எரிவாயுவை உற்பத்தி இலக்கில் பெரும் பகுதி இலக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு வந்துள்ளது.

காரணம் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவிலேயே மிகப்பெரியது என்பதால் சுமார் 18000 டன் எல்பிஐ உற்பத்தி இலக்கை ரிலையன்ஸ்-க்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியா தனது தேவையில் சுமார் 64 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருவது ஈரான் போரின் போது சப்ளை சிக்கல் ஏற்பட்ட போது தெரிய வந்தது.

தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 70 சதவீத தேவையை இந்தியாவிலேயே தயாரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் விலையும் குறைவாக இருக்கும், டாலர் இருப்பையும் சேமிக்க முடியும். 2026ஆம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 33.2 மில்லியன் டன் எல்பிஜி-யை பயன்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தினமும் சுமார் 91000 டன் எல்பிஜி-யை இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 13.1 மில்லியன் டன் LPG இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது, 21.3 மில்லியன் டன் வெள்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றப்பட்டால் சுமார் 70 சதவீத தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய முடியும், இதன் அடுத்தக்கட்டமாக மத்திய அரசு பியோகேஸ் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. இதன் வாயிலாக அடுத்த 5 வருடத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சேவைில் 5-7 சதவீதம் வரையிலான தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+