நடப்பு நிதியாண்டில் (2024-25) வருமான வரி கணக்குகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் நவம்பர் 27 வரை ரூ. 3.08 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2023 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது பணத்தை திரும்பெறுதல் (ரீஃபண்ட்) 46.31 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு வருமானவரி ரிட்டர்ன் போர்டல், ஒரு வினாடிக்கு 900க்கும் மேற்பட்ட ஐடிஆர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது என்று நிதித் துறை தெரிவித்துள்ளது. ஐடி போர்டல் மூலம் ஒரே நாளில் 70 லட்சம் ஐடிஆர்கள் செயலாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஒரே நாளில் 1.62 கோடி ஐடிஆர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.

2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், நிதியமைச்சகம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஜூலை 31, 2024 அன்று ஒரே நாளில் 69.93 லட்சம் ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 22, 2024 வரை 8.50 கோடி ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர்களை விட 7.32 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு மதிப்பீட்டு ஆண்டுகளில் 35 லட்சம் பணத்தைத் திரும்ப பெறாத வழக்குகளைத் தீர்க்க சிறப்பு முயற்சியை எடுத்துள்ளதாகவும், பணத்தைத் ரீஃபண்ட் வாங்குதல் செல்லுபடியாகும் வங்கிக் கணக்குகளுக்குச் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதை எளிமையாக்குவதுடன் முழு செயல்முறையையும் ஒழுங்குபடுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1, 2023 முதல் நவம்பர் 30, 2023 வரை மொத்தம் ரூ. 2.03 லட்சம் கோடி திரும்ப பெறப்பட்டுள்ளதாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவுபடுத்த அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை காட்டுவதாக நிதியமைச்சகம் கூறியது. இந்த மைல்கல்லை எட்டுவதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) முக்கியப் பங்காற்றியுள்ளது.
கடந்த ஆண்டு TIN 2.0 இயங்குதளத்தின் அறிமுகம் இந்த முடிவுகளை அடைவதில் ஒரு கேம்சேஞ்சராக இருந்ததாகவும், TIN 2.0ஐப் பயன்படுத்தி 3 கோடிக்கும் அதிகமான ரீஃபண்ட்களை 0.002 சதவிகிதம் குறைந்த பிழை விகிதத்துடன் வரவு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு பணப்புழக்கத்தை உறுதி செய்வதிலும், வரி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை ஊக்குவிப்பதிலும், பணத்தைத திரும்ப பெறுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் எடுத்துரைத்தது. அதிகரித்த செயல்திறன், அதிக ரீஃபண்ட் கொடுப்பனவுகள், வரி செலுத்துவோருக்கு சேவைகளை மேம்படுத்துவதற்கும், சிறந்த நிர்வாகத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications