ஆந்திர பிரதேச மாநிலத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் 7000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்து துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்படுகிறது. மக்களவையில் எம்பிக்கள் கிருஷ்ண பிரசாத் மற்றும் அவினாஷ் ரெட்டி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பதில் அளித்துள்ளார்.
அதில் ஆந்திர மாநிலத்தில் சாகர்மாலா திட்டங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து சாகர்மாலா திட்டங்களின் கீழ் 29 புதிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு 3,300 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைமுகங்களின் மேம்பாடு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்டவற்றுக்கான முன்மொழிவுகள் தான் தற்போது பெறப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இதில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 2500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 13 திட்டங்களுக்கு தற்போது மத்திய அரசு நிதி உதவி செய்து வருவதாக கூறியுள்ளார்.
மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பது, ஏற்கனவே உள்ள துறைமுகங்களை நவீனப்படுத்துவது, துறைமுகப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயணிகள் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்காக தற்போது நிதி உதவி வழங்குவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதற்காக கூடுதலாக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தன்னுடைய பதிலில் அவர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை இணைந்து ஆந்திர பிரதேச மாநிலத்தில் 4600 கோடி ரூபாய் முதலீட்டில் 36 திட்டப்பணிகளை கையில் எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதில் 2530 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 22 திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், 2070 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 திட்டப்பணிகள் பல்வேறு நிலைகளில் முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கடல் சார்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் பொருட்டு விசாகப்பட்டினத்தில் கல்வி மையம் அமைக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இந்த கல்வி மையங்கள் மூலம் சுமார் 10,000 மாணவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே ஆந்திர மாநிலத்திற்கு பிரத்யேகமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை மற்ற மாநில முதலமைச்சர்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications