ஆயுர்வேதம் என்றாலே மருத்துவத்திற்கு தான் பயன்படுகிறது என்ற கண்ணோட்டம் நிலவிய 2000 ஆண்டில், அதை புதிய பாதையில் கொண்டு சென்றார் மீரா குல்கர்னி என்ற பெண். அன்றைய சூழலில் அரிதான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்க்கமான நோக்கம் கொண்ட மீரா குல்கர்னி, தனது இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார். வெறும் ரூ. 2 லட்ச ரூபாய் முதலீட்டில், இரண்டே இரண்டு ஊழியர்களுடன் தொடங்கிய அவருடைய பயணம் தற்போது ரூ. 10,000 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது. ஆம் "ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ்" என்ற பிராண்டாக தற்போது உயர்ந்து நிற்கிறது மீரா குல்கர்னியின் நிறுவனம்.
மீரா குல்கர்ணியின் வாழ்க்கை ஆயுர்வேதத்தில் மட்டுமே இருந்தது. ஒரு தொழிலாக பார்க்காமல் வாழ்க்கை முறையில் ஆயுர்வேதத்தை எப்படி கொண்டு வருவது என்ற இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார் மீரா குல்கர்னி. முதலில் பாரம்பரிய முறையில் சோப்புகள் தயாரிக்கத் தொடங்கினார்.

ஆனால், சுத்தமான மூலப்பொருட்களைப் பெறுவது அப்போது பெரும் சவாலாக இருந்தது. தரத்தைப் பேண வேண்டும் என்ற உறுதியில், அவரும் அவரது குழுவினரும் மூலப்பொருட்களை தாங்களாகவே தயாரிக்கத் தொடங்கினர். "ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ்" என்ற பெயரை அமெரிக்காவில் பார்த்த தனது நண்பர் கிரண் நாடார் பரிந்துரைத்தார்.
புதிய மூலிகைகள் மற்றும் தூய எண்ணைகளை தயாரித்து விற்பது சற்று சவாலாக இவருக்கு இருந்துள்ளது. சந்தையில் இதற்கான உயர்தர பொருட்கள் கிடைக்கவில்லை. மேலும் குல்கர்னி அடிக்கடி சப்ளையர்களிடம் இருந்து பெரும் பொருட்களையும் சந்தேகத்துடனே பார்த்து உள்ளார்.
இப்படி கஷ்டப்பட்டு தனது தயாரிப்புகளில் தரத்தை உறுதியாக வைக்க மீரா விரும்பினார். ஒரு பொருளை நான் வாங்கினேன் என்றால், அதை பலரும் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன் என்று மீரா குல்கர்னி கூறியுள்ளார். அந்த அளவுக்கு தனக்கு திருப்திகரமான பொருளையே தனது ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார் மீரா.
தரமான பொருட்களைக் கண்டுபிடித்து உருவாக்குவது நேரம் எடுக்கும் ஒன்றாகும். ஊழியர்கள் முதல் சப்ளையர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயல்முறையே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் இந்த சாதனைப் பெண்மணி.
பெண்ணாக இருப்பது தனது தொழிலுக்கு எந்தவித தடையாகவும் இல்லை. தனக்கு உதவ பலர் முன் வந்தனர். இந்த ஆதரவும், உறுதியும் ஆரம்ப காலத்தில் பல சவால்களை தாண்டி வர எனக்கு உதவின என்று மீரா குல்கர்னி தெரிவித்துள்ளார்.
இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 160 ஸ்டோர்கள் வரை ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் விரிந்துள்ளது. ஆடம்பர ஆயுர்வேதம் என்ற அவரது கனவு இந்திய சந்தையை மட்டுமல்லாமல், ஓபெராய், தாஜ் போன்ற பிரபலமான ஹோட்டல்களிலும் இடம்பிடித்துள்ளது.
மீரா குல்கர்னி 19 வயதில் திருமணம் செய்து கொண்டவர். குடும்ப வாழ்க்கையைத் தாண்டி ஆரம்ப லட்சியம் இவருக்கென்று எதுவும் இல்லை. இருப்பினும் இவருடைய தந்தை, தாய், மற்றும் கணவரின் திடீர் மரணம் இவரை 28 வயதிற்குள் 2 குழந்தைகளுடன் தனியாக விட்டுச் சென்றது.
இதனால் பாதிக்கப்பட்டு அவருக்கே தெரியாமல் அவருடைய வலிமை வெளிவர தொடங்கியது. அதன் பிறகு வெற்றிக்கான பாதையில் செல்ல திட்டமிட்டு அதை நோக்கி பயணித்தார் இந்த பெண்மணி.
Kotak Wealth Hurun - Leading Wealthy Women 2020 அறிக்கையின்படி, மீரா இந்தியாவின் பணக்காரப் பெண்களில் ஒருவராக உள்ளார். இவரது நிகர மதிப்பு ரூ. 1,290 கோடி. 2020-ஆம் நிதியாண்டில் ரூ. 253 கோடியும், 2021 நிதியாண்டில் ரூ. 210 கோடியும் வருவாய் ஈட்டியது "ஃபாரெஸ்ட் எசென்ஷியல்ஸ்" நிறுவனம்.
இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்ணும் தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு மீராவின் கதை ஒரு உதாரணம். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தயாரிப்புகள் மீதான தரம் ஆகியவற்றின் காரணமாக தற்போது வெற்றி பெற்றுள்ளார் இந்த சாதனைப் பெண்மணி. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு இவருடைய வெற்றி பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications