போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் Vs பிக்சட் டெபாசிட்.. முதலீடு செய்ய எந்த திட்டம் சிறந்தது?

இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நம்பகமான வருமானம் ஆகியவற்றின் காரணமாக பல முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதால் தங்களுடைய முதலீட்டுக்கு எந்த ஆபத்தும் வராது என்று கருதும் முதலீட்டாளர்கள் இதுபோன்ற சேமிப்பு திட்டங்களை தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் (MIS) மற்றும் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டம் ஆகியவை முதலீட்டாளர்களிடையே பிரபலமான தேர்வுகளாகும். இந்த 2 திட்டத்தில் எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்று சிலருக்கு குழப்பம் வரலாம். இந்தப் பதிவில் அதை ஒப்பிட்டுப் பார்த்து கண்டுபிடிப்போம்.

 போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் Vs பிக்சட் டெபாசிட்.. முதலீடு செய்ய எந்த திட்டம் சிறந்தது?

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் Vs போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்:

டெபாசிட் வரம்பு: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனிநபராக இருந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக்கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆனால் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1000 ரூபாய் முதல் 100-இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கென்று வரம்புகள் இல்லை.

வட்டி விகிதங்கள்: தற்போது ஓர் ஆண்டுக்கு போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது மாதாந்திர அடிப்படையில் செலுத்தப்படும். பிக்சட் டெபாசிட்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்வுக்காலம் கொண்ட திட்டங்களுக்கு 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

வரிச்சலுகைகள்: நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை தேர்வு செய்தால் அதில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஆனால் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் பெறப்படும் வருமானத்திற்கு வருமானவரி சட்டம் 1961-இன் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு வழங்கப்படும்.

முதிர்வுக் காலம்: போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் வரை மாதம் வட்டி வருமானம் வழங்கப்படும். கணக்கு தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என விரும்பும் முதலீட்டு காலத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்ட கணக்கை 1 வருடத்திற்கு பிறகு தேவைப்பட்டால் முன்கூட்டியே மூடலாம். ஆனால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் கழித்து மூடிக்கொள்ளலாம்.

கணக்கு வரம்பு: போஸ்ட் ஆஃபீஸ் FD மூலம் ஒருவர் முடிந்தவரை பல கணக்குகளைத் திறக்கலாம், அதே சமயம் போஸ்ட் ஆஃபீஸ் MIS மூலம் திறக்கப்படும் கணக்கிற்கு வரம்புகள் இருக்கும்.

இந்த 2 திட்டங்களுக்குமே அவற்றிற்கான தனிப்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. அதிக தொகையை வைத்துக்கொண்டு மாதம் மாதம் வருமானம் பெற வேண்டும் என்ற கருதுவோருக்கு போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் சிறந்ததாக இருக்கும். அதே போல 1 வருடம், 2 வருடங்களில் பணத் தேவை இருக்கும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் டெபாசிட் திட்டங்கள் சிறந்த தீர்வாக இருக்கும். எனவே உங்களுடைய தேவையை பொறுத்து இந்த 2 திட்டங்களில் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+