இந்தியாவில் ஏராளமான சாதனை தொழிலதிபர்கள் உருவாகி பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கின்றனர். அப்படியொரு சாதனை தொழிலதிபர்தான் மிஸ்பா அஷ்ரப். மத்திய வகுப்பு மக்களுக்கு எப்படி சேமிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் என வழிகாட்டும் ஜார் என்ற நிறுவனத்தின் அதிபர்.
இந்திய குடும்பத்தினர் தங்கத்தை எப்படி பாரம்பரியமான முதலீடு விருப்பமாகக் கருதுகின்றனர் என்ற அடிப்படையில் இந்தத் தொழிலை அஷ்ரப் தொடங்கினார். இருப்பினும் அஷ்ரபின் சாதனைப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா அஷ்ரப். அவரது தாய் குடும்பத்தலைவி. அவரது தந்தை ஒரு ஆசிரியர். கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானபோதிலும் மிஸ்பா எப்போதும் உயரத் துடித்துக் கொண்டே இருப்பார்.
கல்லூரி முதலாண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்ட மிஸ்பா ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைத்தார். இதற்காகவே அவர் படிப்பை விட்டார். சிபோலா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த முயற்சி தோல்வையை சந்தித்து. 4 ஆண்டுகள் கழித்து மார்ஸ்பிளே என்ற மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
மார்ஸ்பிளே மளமளவென அசுர வளர்ச்சியை அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது மூன்றாவது நிறுவனமான ஜார்-ஐ கொரானா பெருந்தொற்றுக் காலத்தின்போது தொடங்கினார். ஜார் ஒரு ஆப் ஆகும். மிஸ்பாவுடன் நிஷ்சே என்பவர் இணை நிறுவனராக உள்ளார்.
ஜார் ஆப் 100 சதவீதம் பாதுகாப்பானது. உங்களது தினசரி சேமிப்பு மற்றும் தங்கத்திலான முதலீடுகளை செய்யலாம். சேப்கோல்டு மூலம் பவர் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வங்கி நெட்வொர்க்கின் மூலம் உங்களது பண வர்த்தனைகள் நடைபெறும்.
ஒரு வாடிக்கையாளர் செய்யும் முதலீட்டில் 2 சதவீதத்தை கமிஷனாக ஜார் நிறுவனம் வசூலிக்கிறது. ஜார் ஆப்பில் குறைந்தபட்ச லாக்கிங் பீரியடு இல்லை. எனவே நீங்கள் பணத்தை விற்கவோ முதலீடு செய்யவோ 24 மணிநேரத்துக்குள் செய்யலாம்.
தினசரி தங்க சேமிப்பு ஆப்பான ஜார், பண சேமிப்பை ஒரு வேடிக்கையாக உணரச் செய்கிறது. ஆன்லைனில் நீங்கள் செலவிடும் தொகையில் ஒரு சிறிய பங்கை இதன்மூலம் சேமிக்க வைக்கிறது. வீட்டில் உள்ள உண்டியல் போல செயல்படுகிறது. நீங்கள் செலவு செய்யும் பணத்தை எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்குத் தெரிவித்து அதில் சேமிக்க வைக்கிறது.
மிஸ்பா அஷ்ரப் தொடங்கிய பிளாட்பாரத்தில் 11 மில்லியன் உறுப்பினர்கள் வெறும் 18 மாதங்களில் சேர்ந்தனர். நிதி சேகரிப்பு மூலம் அவரது நிறுவனம் 58 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை திரட்டியது. இந்திய மதிப்பில் இது ரூ.476 கோடியாகும்.
தனது ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜாருக்கு மேலும் நிதியை மிஸ்பா திரட்டினார். அதன் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மிஸ்பாவின் நிகரச் சொத்து மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய பண மதிப்பில் 164 கோடியாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications