அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு: இந்திய மாணவருக்கு நடந்தது என்ன?

அமெரிக்காவில் கடந்த வாரம் காணாமல் போயிருந்த 22 வயதான இந்திய முதுகலை மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசத் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தவர். திங்கட்கிழமை முதல் இவர் காணாமல் போனதாக சொல்லப்பட்டது. இதனை அடுத்து அவரை தேடும் பணி நடந்து வந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதை, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

உள்ளூர் காவல்துறை காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசைத்தின் உடலை மீட்டதை சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியது. துணைத் தூதரகம் எக்ஸ் (X) தளத்தில், “காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசைத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியது, மாணவரின் இறப்புக்கு துணைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது,” என்று பதிவிட்டிருந்தது.

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு: இந்திய மாணவருக்கு நடந்தது என்ன?

இந்த மாணவரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துணைத் தூதரகம் வழங்கும். குறிப்பாக, உடலை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. “எங்கள் தூதரக அதிகாரிகள் குடும்பத்தினருடன் நேரடி தொடர்பில் உள்ளனர். தேவையான அனைத்து சடங்குகளுக்கும், சேவைகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்,” எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

பல நாட்கள் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, சோனார் கருவி, ட்ரோன்கள் மற்றும் நீச்சல் வீரர் குழுக்களைப் பயன்படுத்தி, சனிக்கிழமை மதியம் அன்சா ஏரியில் இருந்து சாகேத்தின் உடலை அதிகாரிகள் மீட்டனர். இதற்கிடையில், அவரது பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி அடங்கிய பை, பார்க் ஹில்ஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மதியம், சாகேத்தின் அறை நண்பர் லிங்க்ட்இன் (LinkedIn) வலைத்தளப் பதிவில், அன்சா ஏரியில் கண்டெடுக்கப்பட்டவர் சாகேத் தான் என உறுதிப்படுத்தினார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே அவரது மனநிலை மாறியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “குறைவாகச் சாப்பிடத் தொடங்கி, மற்றவர்களுடன் பழகுவதையும் குறைத்துக் கொண்டார்,” “வாழ்வைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டார்” என்று என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் ஆரம்பத்தில் சாகேத்தின் இந்த நடத்தையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “அவர் எப்போதும் வேடிக்கையாக எதையாவது செய்வார்,” ஆனால், “இப்போது அவர் அதை உண்மையாகவே செய்துவிட்டார் என்ன செய்வது” என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

லிங்க்ட்இன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, சாகேத் ஸ்ரீனிவாசைத் ஐ.ஐ.டி. மெட்ராஸில் வேதியியல் பொறியியலில் (Chemical Engineering) மதிப்பெண்களுடன் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். பேஸ் பி.யு. கல்லூரியில் முன் பல்கலைக்கழகப் படிப்பையும், ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் பள்ளிப் படிப்பையும் முடித்த சாகேத், 10 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 96.5% மதிப்பெண் பெற்றுள்ளார். தமது சுயவிவரத்தில், “ ஆழமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+