தமிழ்நாட்டின் உற்பத்தித் துறைக்கு புதிய சக்தியாக மாறி வரும் ஓசூரில் தொடர்ந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டி உற்பத்தி ஆலையை அமைத்து வரும் வேளையில், இந்தியாவின் முக்கிய சப்ளை செயின் ஹப் ஆக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஓசூரை அடுத்தகட்ட வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், தற்போது ஒசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி விமான பயணிகளைக் கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு மற்றும் சென்னை-யின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ஓசூர் முக்கிய பங்கீட்டை வகிக்கும் அதேவேளையில் இந்நகரில் வளர்ந்து வரும் உற்பத்தி சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம் அமைக்கும் திட்டம் மிகப்பெரிய அளவிலான பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த அறிவிப்பு, இப்பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையில் அடித்தளமாக இருக்கும். இந்த விமான நிலையம் ஓசூருக்கும் நாட்டின் பிற முக்கிய பகுதிகளுக்குமான இணைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.
ஓசூர் விமான நிலையம் ஓசூர் மட்டுமின்றி, தர்மபுரி மற்றும் சேலம் போன்ற அண்டை மாவட்டங்களுக்கும் பெரிய அளவில் பயன் அளிக்கும். மேலும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
பெங்களூர்-க்கு இணையான ஓசூரின் சிறந்த வானிலை, புதிய விமான நிலையம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டிலும் வளர்ச்சியைத் தூண்டும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
ஓசூர் ஏற்கனவே EXIM நுழைவாயில்களுடன் சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது மற்றும் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற முக்கிய உற்பத்தி மையங்கள் மற்றும் தொழில்துறை கிளஸ்டர்களுக்கு அருகில் உள்ளது.
ஓசூர் ஆட்டோமொபைல் மற்றும் EV உற்பத்தி, மேம்பட்ட உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. இதோடு ஓசூரில் ஏற்கனவே IT பார்க் அமைக்கும் திட்டம் இருப்பதால் உற்பத்தி மற்றும் IT ஹப் ஆக ஓசூர் உருவாகி வருகிறது.
தற்போது ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ், டிவிஎஸ், அசோக் லேலண்ட், டைட்டன் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (ஐஏஎம்பிஎல்) போன்ற முக்கிய நிறுவனங்கள் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications