சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உயர்த்தப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு செவ்வாயக்கிழமை மிகப்பெரிய முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக உற்பத்தி துறையை குறிவைத்து இந்த கூட்டத்தில் ரூ.38,698.80 கோடி மதிப்பிலான முதலீட்டை அடங்கிய 14 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முதலீடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டன, இந்த முதலீட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் புதிதாக 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தபடி, இந்த முதலீடுகள் பிசிபி உற்பத்தி, குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் போன் உதிரிபாங்கள் மற்றும் கேஸ்கள், ஆடம்பர கார்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள், உயர்தர உபகரணங்கள் மற்றும் அவற்றின் மென்பொருள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், செயற்கை தோல் காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அம்மோனியா), எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் குவிந்துள்ளது.
இன்று தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடுகளில், டாடா மோட்டார்ஸ் ரானிப்பேட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்களை தயாரிக்க ரூ.9,000 கோடி முதலீடும் அடங்கும். இதை தொடர்ந்து லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரத்தில் ரூ.10,375 கோடி முதலீடு செய்யும்.

பிற குறிப்பிடத்தக்க முதலீடுகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது அரியலூர் நகரில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் ப்ரீட்ரெண்ட் இண்டஸ்ட்ரியல் இந்தியா, காஞ்சீபுரத்தில் ரூ.1395 கோடி முதலீடு செய்யும் கேய்ன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா, கிருஷ்ணகிரியில் ரூ.613.6 கோடி முதலீடு செய்யும் அசென்ட் சர்க்யூட்ஸ், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் கிருஷ்ணகிரியில் ரூ.510 கோடி முதலீடு செய்யும் லூகாஸ் டிவிஎஸ் ஆகியவை இந்த 14 நிறுவனங்களின் ரூ.38,698.80 கோடி மதிப்பிலான முதலீட்டில் அடங்கும்.
இந்த முதலீடுகளில் மிக முக்கியமான, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த பிரபல ஒப்பந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கானின் கிளை நிறுவனமான யுசான் டெக்னாலஜி (இந்தியா) ரூ.13,180 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடு மாநிலத்தில் 14,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆப்பிளுக்காக ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான புதிய அசெம்பி அலகு தமிழ்நாட்டில் நிறுவப்படும்.


Click it and Unblock the Notifications