கோவை புதிய எல்காட் ஐடி பார்க்.. முதல் நாளே சம்பவம்.. அடிதூள்..!!

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயம் எழுதும் வகையில், கோவை விளாங்குறிச்சியில் அமைந்துள்ள எல்காட் ஐடி பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 5ஆம் தேதி திறந்து வைத்தார். சுமார் 158 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அதிநவீன ஐடி அலுவலக கட்டிடம், கோவையை இந்தியாவின் முன்னணி ஐடி மையங்களில் ஒன்றாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐடி பார்க், 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் , சிறிய, பெரிய என அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த அலுவலக இடங்களைத் தமிழ்நாடு அரசு அளிக்க உள்ளது.

கோவை புதிய எல்காட் ஐடி பார்க்.. முதல் நாளே சம்பவம்.. அடிதூள்..!!

இந்த புதிய எல்காட் ஐடி பார்கில் இரண்டு அடித்தளங்களில் வாகன நிறுத்துமிடம் மற்றும் தரை மற்றும் ஐந்து மேல் தளங்களில் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களுக்கான அலுவலக இடவசதியை அளிக்க உள்ளது.

இந்த கட்டிடத்தில் 8 லிப்ட், 24 மணிநேரமும், தொடர்ந்து மின்சார இணைப்பு, தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், தீயணைப்பு வசதிகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் சுமார் 72 மணி நேரம் தொடர்ந்து இயங்க ஜெனரேட்டர் இயக்கத்திற்கான டீசல் சேகரிப்பு தொட்டி, நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன், நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டப்பட்டுள்ளது.

இந்த ஐடி பார்க்கில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். இதன் மூலம் சுமார் 3,500 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக MKS Vision, Medcode என 10 நிறுவனங்களுக்கான அலுவலக குத்தகை ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் எல்காட் ஐடி பார்க் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 100 சதவீத அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. முதல் நாளிலேயே எல்காட் ஐடி பார்க் சம்பவம் செய்துள்ளது.

இதே நிகழ்ச்சியில் கோயம்புத்தூரின் வரப்பட்டி சிப்காட் பகுதியில் தொழிற்சாலை அமைக்க BEL, Mak Controls & Systems, Realtech GPS, Innospire Electro Tech, Cogent Automation, Eagle Technologies, Hydrill Equipment ஆகிய நிறுவனங்களுக்கு நில ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

கோவைக்கு புதிய வளர்ச்சி: இந்த ஐடி பார்க் திறப்புவிழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டம் கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்றும், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும், மாநிலத்தை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையமாக மாற்றுவதே தனது அரசின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

கோவையின் ஐடி துறை வளர்ச்சி: கோவை காலங்காலமாக உற்பத்தி மற்றும் நெசவுத் துறைகளுக்கு பெயர் பெற்றது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

இந்த எல்காட் ஐடி பார்க் திறப்பு, கோவையின் ஐடி துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இது, கோவையில் உள்ள பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.

தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி: தமிழ்நாடு அரசின் எல்காட் அமைப்பு, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் இரண்டாவது ஐடி பார்க்கை அமைப்பதன் மூலம், மாநிலத்தில் தொழில்நுட்பத் துறையில் புதிய மற்றும் அதிகப்படியான முதலீட்டை ஈர்க்கும்.

கோவை எல்காட் ஐடி பார்க்கின் திறப்புவிழா, தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டம், கோவைக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+