தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை இன்று திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த ஐடி பூங்கா, தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இதேபோல், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூர் கிராமத்தில் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா, சேலம் மாவட்டத்தின் ஐடி துறையின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக அமையும்.

தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தது மட்டும் அல்லாமல் இந்த ஐடி பார்க்கில் அலுவலகம் அமைக்க குத்தகை ஒப்பந்தம் செய்தவர்களுக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையையும் இன்று கொடுத்தார். இதன் படி தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்கில் Hamly Business Solutions, Inforios Software Technologies ஆகியவை அலுவலகம் அமைக்கிறது. இதேபோல் சேலம் நியோ டைடல் பார்க்கில் Namma Office, AKS Hitech Smart Solutions, Tamil Zorous, Telth Healthcare, Axis Healthcare ஆகியவை அலுவலகம் அமைக்கிறது.
தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா: தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, சுமார் 3.4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 55,000 சதுர அடி அலுவலக இடத்துடன் கூடிய இந்த பூங்கா, தொழில்முனைவோர் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இங்கு, ஸ்டார்ட்-அப்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
சேலம் மினி டைடல் பூங்கா: சேலம் மாவட்டம், கருப்பூரில் அமைந்துள்ள இந்த பூங்கா, சேலம் நகரின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். இந்த பூங்காவின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு கழகம் (TIDEL): இந்த மினி டைடல் பூங்காக்கள், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு கழகம் (TIDEL) மூலம் கட்டப்பட்டுள்ளன. TIDEL, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அரசு நிறுவனமாகும். சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் ஏற்கனவே பெரிய அளவிலான ஐடி பூங்காக்களை அமைத்துள்ள TIDEL, தற்போது சிறு நகரங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
நியோ டைடல் பார்க் என்பது, டைடல் பார்க்கின் சிறிய வடிவமாகும். ஆரம்ப கட்ட ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகளைக் கொண்ட பூங்காக்கள் "டைடல் நியோ பார்க்" என்று அழைக்கப்படுகின்றன. டைடல் நியோ பார்க் என்பது 50000 சதுரடி முதல் 1 லட்சம் சதுரடி வரையிலான இடத்தில் அமைக்கப்படுபவை.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் அறிவிப்பு..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!

ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications