தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு பல முக்கியத் திட்டங்களைக் கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக ஐடி பார்க், தொழிற்பூங்கா, சிறு தொழில் ஊக்குவிப்பு, விவசாயத்தில் இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு, பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்குள் வர ஊக்குவிப்பு எனப் பல முக்கியத் திட்டத்தைக் கையில் எடுத்து வரும் நிலையில் மலை வெள்ளம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.
இந்தப் பிரச்சனைகளைக் களைந்து கோவையில் நடந்த மிகப்பெரிய முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுமார் 59 நிறுவனங்களிடம் முதலீட்டை ஈர்க்கவும், தொழில் துவங்கவும் ஒப்பந்த செய்து கையெழுத்திட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முந்தைய ஆட்சியில் அரசு செய்த ஒப்பந்தங்களுக்கு விரைவில் தீர்வு காணவும், தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பம் முதலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக 59 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
59 ஒப்பந்தம்
கோவை முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசு கையெழுத்திட்ட சுமார் 59 ஒப்பந்தம் மூலம் சுமார் 35,208 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்று சுமார் 70,000 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கு தர முடியும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
இந்த 59 ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது 3 ஒப்பந்தங்கள், சென்னையில் அதானி எண்டர்பிரைசர்ஸ் புதிதாக ஒரு டேட்டா சென்டரை அமைக்கிறது. இதேபோல் ஷெல் இந்தியா தமிழ்நாட்டில் ரீடைல் விற்பனையகங்களையும், டேக்-களையும் உருவாக்க உள்ளது.
டிவிஎஸ் மோட்டார்
மூன்றாவதாக இந்தியாவின் முன்னணி மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் தமிழ்நாட்டு அரசுடன் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது, இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 4 வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பியூச்சர் டெக்னாலஜிஸ் மற்றும் எலக்ட்பிக் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறை
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் துறையைச் சார்ந்து சுமார் 485 கோடி ரூபாய் முதலீட்டில் 1960 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் ஒப்பந்தத்தையும் செய்துள்ளது தமிழக அரசு.
முக்கிய மாவட்டம்
இது மட்டும் இக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி சேர்ந்த 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 10 திட்டங்களையும் துவக்கிவைத்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications