தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் வேளையில், நேற்று நடந்த முக்கிய கூட்டத்தில் உலகளவில் ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நைக் நிறுவனத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
முக ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோவி-ல் இருந்து தற்போது சிகாகோ-வில் இருக்கும் வேளையில் பல நிறுவனங்களையும், தொழில்துறையினரைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று
உலகளாவிய காலணி தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் நைக், தமிழ்நாட்டில் தனது காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நைக் நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே காலணி உற்பத்தி செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனம் தனது உற்பத்தியை மேலும் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் காலணி ஏற்றுமதியிலும் பெரும் பகுதி வகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் தமிழ்நாடு சீனா போல் வெறும் உற்பத்தி தளமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாடு அரசு, இந்த சந்திப்பில் நைக் நிறுவனத்தைச் சென்னையில் தனது ப்ராடெக்ட் கிரியேஷன் மற்றும் டிசைன் சென்டரை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது.
டிசைன் சென்டர் சென்னையில் அமைக்கப்பட்டால், உலக நாடுகளுக்கான தயாரிப்புகளைத் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கும் நிலை வரும். இந்த டிசைன் அனுபவம் பிற துறைகளிலும் பெரிய அளவில் பலன் அளிக்கும். மேலும் இந்த டிசைன் சென்டர் நைக் நிறுவனத்திற்கு அதிக பலன் அளித்தால் உலக நாடுகளுக்கான மொத்த உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு அரசு, நைக் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் நேற்றைய சந்திப்பில் நைக் உடன் எவ்விதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
இந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 48 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதேபோல் இந்தியாவின் மொத்த காலணி தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 32 சதவீதம் கொண்டு இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனா+1 கொள்கை வாயிலாக Nike, Adidas, Puma பிராண்டுகளின் காலணிகளைத் தயாரிக்கும் தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
தோல் அல்லாத காலணி தயாரிப்பில் உலகின் 4 மிகப்பெரிய நிறுவனங்கள் என்றால் அது Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu ஆகியவை தான். இந்த நிறுவனங்கள் பாத்ரூம் செருப்பு முதல், ஸ்போர்ட்ஸ் ஷூ வரையில் தயாரிக்கிறது. தற்போது இந்த 4 தைவான் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மேலும் பிக் 4 என அழைக்கப்படும் இந்த 4 தைவான் நிறுவனங்கள் Nike, Adidas, Reebok, Puma, Converse, Crocs ஆகிய பிராண்டிகளின் காலணிகளைத் தயாரிக்கிறது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications