மீண்டும் வருது Ford.. அமெரிக்காவில் ஸ்டாலின் முக்கிய பேச்சுவார்த்தை.. எல்லாமே பாசிட்டிவ்..!

தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறையின் முக்கிய உற்பத்தி ஹப் ஆக இருக்கும் காரணத்தால் பல புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதோடு, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் தீவிரமாக விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இப்படியிருக்கையில் ஒரு நிறுவனம் மட்டும் தமிழ்நாட்டில் தனது உற்பத்தியை முடக்கி வைத்துள்ளது, இதைச் சரி செய்யத் தமிழ்நாடு அரசு கடந்த ஒரு வருடமாகப் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலினே களத்தில் இறங்கியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்ட் தனது சொந்த வர்த்தக நோக்கத்திற்காகச் சென்னை மறைமலை நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் எவ்விதமான உற்பத்தி பணிகளையும் செய்யாமல் முடக்கி வைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஃபோர்டு பெரும் வர்த்தக பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் இந்தியாவில் இருக்கும் குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்துவிட்டு, சென்னை தொழிற்சாலையை மட்டும் வைத்துள்ளது.

மீண்டும் வருது Ford.. அமெரிக்காவில் ஸ்டாலின் முக்கிய பேச்சுவார்த்தை.. எல்லாமே பாசிட்டிவ்..!

இந்த நிலையில் சென்னையில் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திறன் கொண்ட இத்தொழிற்சாலை மூடிவைத்திருப்பது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குச் சுமையாக மாறி வருகிறது. இதேவேளையில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 3 வாகனங்களை அறிமுகம் செய்யவும், சென்னையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானாலும் இதில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இந்த பிரச்சனையைச் சரி செய்ய முடிவு செய்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.

அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் முக.ஸ்டாலின், ஃபோர்ட் மூத்த நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ஃபோர்டு நிர்வாகத்திற்குச் சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையின் திட்டம் என்ன..? இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்திற்கான எதிர்கால திட்டம் என்ன? சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி துவங்குவது குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஃபோர்டு மோட்டார்ஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கும் - ஃபோர்டுக்கும் மத்தியிலான 3 தசாப்தம் உறவை மீண்டும் புதுப்பிக்க ஏதுவான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மூலம் விரைவில் உலகிற்கு மேக் இன் தமிழ்நாடு கார்கள் செல்லும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதமாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஃபோர்ட் இந்தியா நிர்வாகத்திடம் தொடர்ந்து மறைமலை நகர் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை மூலம் விரைவில் முடங்கிப்போன ஃபோர்டு தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த மாத இறுதியில் ஃபோர்டு மூத்த அதிகாரிகள் வர உள்ளனர், இந்த பயணத்தில் இந்தியாவின் ஃபோர்டு நிறுவனத்தின் செயல்பாடுகளையும், சென்னை மறைமலை நகர் தொழிற்சாலை குறித்தும் முடிவு எடுக்கப்படும். சென்னை தொழிற்சாலையில் கார்கள் தயாரிப்பது மட்டும் அல்லாமல் இன்ஜின் தயாரிக்கும் கட்டமைப்பும் உள்ளது. இதனாலேயே இத்தொழிற்சாலையை வாங்க டாடா மோட்டார்ஸ், JSW போன்ற பல முன்னணி நிறுவனங்கள் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் இது தோல்வியில் முடிந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+