சென்னை: அமெரிக்காவின் முன்னணி சுகாதார சேவை நிறுவனமான ஆப்டம், தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தில் சிகாகோ-வில் இந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் படன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது, ஆப்டம் நிறுவனம் தமிழ்நாட்டில் 5000-க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனம் தனது செயல்பாடுகளை அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்டம் நிறுவனத்தைத் தனது செயல்பாடுகளையும், ஊழியர்கள் எண்ணிக்கையையும் மதுரை மற்றும் திருச்சி விரிவுபடுத்தவே முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து ஆப்டம் நிர்வாகம் சாதகமான முடிவை எடுத்தால் பல நூறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியச் சுகாதாரத் துறைக்கு நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும்.
ஆப்டம், இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் இத்துறையில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் துறை சார்ந்த ஆழமான நிபுணத்துவம் கொண்டு உள்ளது. இதோடு அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு உள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்டம், 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. மேலும், டிஜிட்டல் சுகாதார சேவைகள், ப்ராடெக் டெவலப்மென்ட், ஆட்டோமேஷன், அனலிட்டிக்ஸ், டேட்டா சொல்யூஷன்ஸ் மற்றும் ஹெல்த் கேர் ஆப்ரேஷன்ஸ் நடவடிக்கைகளையும், சேவைகளையும் அளித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு, ஆப்டம் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடு வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications