சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல்வரின் அமெரிக்கப் பயணத்தின் முதல் நாளான நேற்று சான் பிரான்சிஸ்கோவில் அவர் மேற்கொண்ட முக்கிய சந்திப்புகள் மற்றும் கூட்டங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தின் முதல் நாளில் சந்தித்த அமெரிக்க நிறுவனங்கள், தமிழ்நாட்டில் மொத்தம் ரூ. 900 கோடிக்கு மேல் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முதலீடுகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வர உள்ளது. இதன் மூலம், பல்வேறு துறைகளில் சுமார் 4,100-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள்:
நோக்கியா: ரூ. 450 கோடி முதலீடு செய்து, 100 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
பேபால்: 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
Yield Engineering Systems: ரூ. 150 கோடி முதலீடு செய்து, 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
மைக்ரோசிப்: ரூ. 250 கோடி முதலீடு செய்து, 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
இன்ஃபினக்ஸ்: ரூ. 50 கோடி முதலீடு செய்து, 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
முதல்வர் ஸ்டாலின் டிவீட்: இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் "சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள் பயணம், எதிர்வரும் நாட்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது! சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டில் ரூ. 900 கோடிக்கு மேல் முதலீடு பெற்றோம். இதன் மூலம் பல்வேறு துறைகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் தனது டிவீட்டில், அமெரிக்க பயணத்தில் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த உத்வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். தமிழ்நாட்டிற்கு அதிகமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய நம் பயணத்தை வேகப்படுத்த முடியும்! என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் நோக்கம்: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறை, உற்பத்தித் துறை மற்றும் பிற முக்கிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதாகும். தமிழ்நாட்டை ஒரு முன்னணி தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாக இந்த பயணம் அமைந்துள்ளது. முதல்வருடன் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கைடென்ஸ் தமிழ்நாடு அதிகாரிகள் என பெரிய பட்டாளம் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.
தொடர்ச்சியான முயற்சிகள்: முதல்வர் ஸ்டாலின் இந்த பயணத்தில், அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடனும், மூத்த அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுனர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகின்றார். இந்த முயற்சிகள் தொடர்ந்து பிற முக்கிய பொருளாதார நாடுகளிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications