இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழக முதல்வர், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் முக்கிய அதிகாரிகள் கொண்ட பெரிய டீம் தற்போது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் உள்ளது.
இந்த பயணத்தைத் துவங்கும் போதே 30 முக்கிய கூட்டங்களை நடத்தும் திட்டத்துடன் தமிழக அரசு அமெரிக்கா சென்ற நிலையில், தற்போது தினமும் ஒரு அதிரடி என்ற வகையில் இந்த அமெரிக்கா பயணத்தில் அடுத்த தமிழ்நாடு அரசு அந்நாட்டு நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வரிசையில் செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒரே நாளில் 3 ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

லிங்கன் எலக்ட்ரிக் உள்ளிட்ட 3 நிறுவனங்களுடன் சுமார் ரூ.850 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை டிவீட் செய்து தெறிக்கவிட்டு உள்ளார்.
செப்டம்பர் 5 அன்று சிகாகோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுப் பரிமாறப்பட்டன.
ஆர்க் வெல்டிங், ரோபோடிக் வெல்டிங் அமைப்புகள் மற்றும் பிளாஸ்மா மற்றும் ஆக்ஸிஃப்யூல் கட்டிங் உபகரணங்களில் முன்னணி நிறுவனமான லிங்கன் எலக்ட்ரிக் (Lincoln Electric), சென்னையின் புறநகரில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதியை விரிவுபடுத்த ரூ.500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதை தொடர்ந்து செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளரான விஷய் பிரசிஷன் (Vishay Precision), பல நாடுகளில் செயல்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்சார் மற்றும் டிரான்ஸ்டியூசர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ரூ.100 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது, இது ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலவ என்பதால் இந்த 100 கோடி முதலீட்டில் இந்த உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோமொட்டிவ் எலக்ட்ரிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளரான விஸ்டியன் கார்ப்பரேஷன் (Visteon Corporation), சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ரூ.250 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
லிங்கன், விஷய் மற்றும் விஸ்டியன் ஆகியவை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அரசு தெரிவித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications