அமெரிக்காவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன், சென்னையில் புதிய கிரீன்ஃபீல்டு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ராக்வெல் ஆட்டோமேஷன் இந்த தொழிற்சாலைக்காக சுமார் 666 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ராக்வெல் ஆட்டோமேஷன் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல முக்கியமான துறைகளில் இயங்கி பல சேவைகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் இப்புதிய முதலீட்டின் வாயிலாக செமிகண்டக்டர் துறையில் கவனம் செலுத்த முடிவு செய்து 666 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சுமார் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 17 நாள் அமெரிக்கப் பயணத்தில் இதுவரையில் 4 செமிகண்டக்டர் துறை சார்ந்த முதலீட்டை பெற்ற தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்ப்பதில் அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஏற்பட்ட பின்னடைவை இந்த அமெரிக்கப் பயணத்தில் சிறிய அளவில் ஈடுகட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 செமிகண்டக்டர் OSAT மற்றும் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை திட்டத்தில் 4 திட்டங்கள் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது, ஒன்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் மாநில அரசு அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அதானி - இஸ்ரேல் டவர் செமிகண்டக்டர் கூட்டணியின் 10 பில்லியன் டாலர் திட்டமும் பிஜேபி ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மத்திய அரசு இதற்கான ஒப்புதலை எப்போது வழங்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் தான் முதல்வர் முக.ஸ்டாலின் - அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான அணி இந்த அமெரிக்க பயணத்தில் செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்ப்பதில் தனி கவனத்தைச் செலுத்தியது.
அப்ளைடு மெட்டிரீயல்ஸ்: உலகின் இரண்டாவது மிகப்பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி உபகரண தயாரிப்பாளரான அப்ளைடு மெட்டிரீயல்ஸ், இந்தியாவில் தனது முதல் உற்பத்தித் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. மேலும், சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் மேம்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தையும் அமைக்க உள்ளது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.
யீல்டு இன்ஜினீரிங் சிஸ்டம்ஸ்: இந்த அமெரிக்க நிறுவனம், கோயம்புத்தூர் சுலூர் பகுதியில் செமிகண்டக்டர் உபகரணங்களுக்கான புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ரூ.150 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மைக்ரோசிப்: சென்னை செம்மஞ்சேரியில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க மைக்ரோசிப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ.250 கோடி செலவில் அமைய உள்ள இந்த மையம், 1500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஆட்டோடெஸ்க் உடன் தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு முதல்வர் நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சாஃப்ட்வேர் நிறுவனமான ஆட்டோடெஸ்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டு உள்ளது.
இதன் மூலம், மாநிலத்தில் இருக்கும் இளம் பட்டதாரிகளும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் மேம்படுத்தப்படும், மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
நேற்றைய கூட்டத்தில் கையெழுத்திட்ட இரண்டு ஒப்பந்தங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கியமான படிகளாகும். ராக்வெல் ஆட்டோமேஷனின் முதலீடு, செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரத்தில், ஆட்டோடெஸ்க் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்ப திறன்களை வழங்கி, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications