சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் அடுத்தடுத்து முதலீட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மாநிலத்தின் வேகமான வளர்ச்சிக்கு உற்பத்தித் துறையை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காகப் பல தொழிற்துறை பூங்காக்களும், கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையான வளர்ச்சிக்கு பேஸ்மென்ட்-ஐ கூடுதல் வலிமையாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு துறையிலும் கைதேர்ந்த நிறுவனத்தை உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முக்கிய நோக்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தில் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில் அமெரிக்க நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், தொழிற்சாலை, அலுவலகம் அமைக்கவும் ஊக்குவிக்க தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் பெரும் படை முதல்வருடன் சென்றுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கப் பயணம் தற்போது பயணிக்கத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நான்கு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
GeakMinds நிறுவனம்: இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட IT சேவைகள் நிறுவனம், சென்னையில் IT மற்றும் அனலிடிக்ஸ் சேவைகள் மையத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த சென்டர் 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Ohmium நிறுவனம்: இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், செங்கல்பட்டில் எலெக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் சொல்யூஷன் சிஸ்டம்ஸ்-க்கான உதிரிப்பாகங்களின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. 400 கோடி முதலீடு செய்யப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
PayPal நிறுவனம்: இந்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல நிதி தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் AIக்கான மேம்பட்ட டெவலப்மென்ட் சென்டரை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய டெவலப்மென்ட் சென்டர் 1,000 உயர் தொழில்நுட்ப மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Nokia நிறுவனம்: இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் (Fixed Network) சோதனை மையத்தை அமைக்க ரூ. 450 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது 25, 50 மற்றும் 100 ஜிபி பேசிவ் ஆப்டிக்கல் நெட்வொர்க் மற்றும் சிருசேரி சிப்காட்-ல் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமையும். இது மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications