முக ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் தற்போது சிகாகோ-வில் இருந்து தினமும் பல நிறுவனங்களையும், தொழில்துறையினரைச் சந்தித்து வரும் வேளையில் நேற்று 3 முக்கியமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் 2000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கம்யூனிகேஷன் நெட்வொர்க நிறுவனமான திரில்லியண்ட் (Trilliant), தமிழ்நாட்டில் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம், நேற்று சிகாகோ-வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் Trilliant மற்றும் தமிழ்நாடு அரசு மத்தியில் கையெழுத்தானது.

இந்த தொழிற்சாலை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய தொழில்துறை பகுதியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிஸ்கோ, நோக்கியா உள்ளிட பல நிறுவனங்கள் டெலிகாம் மற்றும் கம்யூனிகேஷன் பொருட்களைத் தயாரித்து வரும் வேளையில், இந்த முக்கியமான லிஸ்ட்டில் தற்போது Trilliant இணைய உள்ளது.
Trilliant அமைக்கும் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலை மூலம், பல நூறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரில்லியண்ட், தனது தொழில்நுட்ப திறன்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கியமான பங்களிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு, திரில்லியண்ட், சென்னையில் குளோபல் டெவலப்மென்ட் மற்றும் சப்போர்ட் சென்டரை அமைக்க உள்ளது. இந்த புதிய ஜிசிசி அலுவலகத்தின் மூலம் சென்னையில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு திரில்லியண்டின் சேவைகளுக்கான சப்போர்ட் சேவைகளும் சென்னையில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, திரில்லியண்ட் போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முதல்வரின் அமெரிக்கப் பயணத்தின் துவக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற அவர் தற்போது சிகாகோ-வில் உள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு இந்த அமெரிக்க பயணம் மிகவும் முக்கியமானதாக அமைய உள்ளது. முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 11 அன்று சிக்காகோவிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 12 அன்று சென்னை வர உள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications