MK Stalin USA Trip: அமெரிக்கப் பயணத்தில் படுபிசியாக இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சிகாகோ நகரில் முக்கியமான வர்த்தக தலைவர்களையும், தொழிற்துறை நிபுணர்களையும் சந்தித்து பேசினார். இந்த கூட்டங்களில் இரு நிறுவனங்கள் சென்னையில் தனது அலுவலகத்தை அமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
முதல் நிறுவனம்: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காப்பீடு மற்றும் நிதித் துறையின் முன்னணி நிறுவனமான அசூரன்ட் (Assurant), சென்னையில் தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

அசூரன்ட் சென்னைக்கு வருவது ஏன் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. Assurant நிறுவனம் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பார்சூன் 500 நிறுவனத்தில் இருக்கும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஒரு நிறுவனம் சென்னையில் புதிய GCC அலுவலகத்தை அமைப்பது மூலம் லாபம் ஈட்டினால், பிற பார்சூன் 500 நிறுவனங்களும் சென்னைக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
பார்சூன் 500 நிறுவனங்கள் அதிகளவில் சென்னைக்கு வரும் பட்சத்தில் உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் கவனம் நம் மாநிலத்தின் பக்கம் திரும்பும் ஒரு வாய்ப்பை பெறும். இதன் ஆரம்பம் சிறியதாக இருந்தாலும் பலன் மிகவும் அதிகம், அந்த வகையில் அசூரன்ட் சென்னைக்கு வருவது ஜாக்பாட்.
இன்று சிகாகோ-வில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கும் அசூரன்ட்டுக்கும் இடையே முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் ஜிசிசி அலுவலகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரண்டாவது நிறுவனம்: ஈட்டன் (Eaton) என்னும் உலகளாவிய மின்சார மேலாண்மை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னணி நிறுவனம், சென்னை மாநகரின் முக்கிய தொழில் பகுதியான பெருங்குடியில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சென்டர் மற்றும் உலகளாவிய பயன்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது.
இந்த R&D சென்டர் மற்றும் புதிய குளோபல் அப்ளிகேஷன் சென்டர் ஆகியவற்றை அமைப்பது மூலம் சென்னையில் சுமார் 500 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. மேலும் இதற்காக 200 கோடி முதலீடு செய்ய உள்ளது Eaton நிறுவனம், இதோடு சென்னையில் உள்ள தனது பொறியியல் மையத்தையும் விரிவுபடுத்த உள்ளது.
இந்த 200 கோடி ரூபாய் திட்டத்திற்காக சிகாகோவில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்திற்கும் - தமிழ்நாடு அரசுக்கும் மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தானது
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications