ஆப்பிள்-ஐ கலாய்த்து தள்ளிய சாம்சங்.. நடுவில் வந்து சிக்சர் அடித்த MKBHD..!

ஆப்பிள் நேற்று வெளியிட்ட புதிய ஐபோன் 18 சீரியஸ் மற்றும் ஐபோன் டியோ என்ற ஃபோல்டபிள் போன் அறிமுகத்திற்கு பின்பு, மக்கள் மத்தியில் வழக்கம் போல் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் முக்கியமாக ஆப்பிள்-ன் சக போட்டி நிறுவனமான சாம்சங் தொடர்ந்து கலாய்த்து வருகிறது.

உலகளாவிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங் ஆகியவற்றுக்கு மத்தியில் தொடர்ந்து போட்டிப்போட்டு வரும் வேளையில் foldable smartphone பிரிவில் மிகவும் தாமதமாக வந்துள்ள ஆப்பிளை சமுக வலைத்தளத்தில் சாம்சங் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

ஆப்பிள்-ஐ கலாய்த்து தள்ளிய சாம்சங்.. நடுவில் வந்து சிக்சர் அடித்த MKBHD..!

மடக்க கூடிய போன்களை சாம்சங் 2019லேயே அறிமுகம் செய்துள்ளது, ஹூவாய் 3 ஆக மடிக்கக்கூடிய போன்களை அறிமுகம் செய்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் வேளையில் ஆப்பிள் மிகவும் லேட்டாக இப்பிரிவுக்குள் நுழைந்துள்ளதை சுட்டிக்காட்டி சாம்சங் முதல் பதிவை செய்தது.

இந்த பதிவுகளை ஆப்பிள் தனது புதிய போன்களை அறிமுகம் செய்த அடுத்த சில நொடிகளிலேயே கிண்டலாக பதிவு செய்ய துவங்கி சுமார் 1 மணிநேபத்தில் 5க்கும் அதிகமான பதிவுகளை தனது சாம்சங்கம் மொபைல் US டிவிட்டர் கணக்கில் இருந்து செய்துள்ளது.

Also Read

இதில் முதல் பதிவில், தட்டில் நாங்கள் வைத்த மீதி வைத்ததை சூடு செய்து அறிமுகம் செய்த பின்பு சொல்லுங்க.. என்ற பதிவை செய்தது. இதன் பின்பு இந்த முறை பெட் டைட் கிளாக் உங்க போனில் இல்லையா..? என்றும், எல்லோருக்கும் 3 fold போனுக்கு மாறி வரும் வேளையில் மிகவும் தாமதமாக ஆப்பிள் வந்துள்ளது எனவும், நீங்க பொறுமையா வாங்க, அதுவரை நாங்க tri-fold போனை மடித்துக்கொண்டு இருக்கிறோம் எனவும் பதிவு செய்துள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய போனுக்கு DUO என பெயர் வைத்ததை சாம்சங் DuoLingo நிறுவனத்தை டேக் செய்து உங்களையும் காப்பி அடித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளது.

சாம்சங் மட்டும் அல்லாமல் பிரபல டெக் ரிவ்யூவரான MKBHD என அழைக்கப்படும் மார்கியூஸ் பிராவுன்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் 2026ல் டியோ, நியோ என ஆப்பிள் பெயர் வைப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது என பதிவிட்டு உள்ளார்.

2019ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது லேப்டாப்-க்கு நியோ மற்றும் டியோ என பெயர் வைத்திருந்தது, இதை 2026ல் ஆப்பிள் பயன்படுத்தியது இந்நிறுவனத்தில், புதிய சிஇஓ வந்தும் பழைய நிறுவனமாகவே இருப்பதாகவும், எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ஆப்பிள் - சாம்சங் மத்தியிலான இந்த வார்த்தை போர் இன்ரு நேற்று துவங்கியது அல்ல 2014ல் ஐபோன் 6 பிளஸ் அறிமுகம் செய்த போது Bendgate விவகாரத்தில் துவங்கி கடைசியாக ஐபோன் 17 கேமரா-வை கலாய்த்து முதல் பல விஷயங்களை வைத்து தொடர்ந்து கலாய்த்து வருகிறது.

இந்த கலவையான விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் ஆப்பிள் தனது புதிய போன்களை அறிமுகம் செய்த பின்பு 0.28 சதவீத சரிவுடன் 315.34 டாலருக்கு முடிந்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ 1199 டாலருக்கும், ஐபோன் டியோ 1999 டாலருக்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+