வெள்ளிக்கிழமை அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதற்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதேபோல் பிஜேபி தரப்பினர் பிரிட்டன் நாட்டில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.
நாடாளுமன்றத்தில் நிலவிய கடும் அமளிக்கு மத்தியில் 45 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதன் மூலம் வருகிற ஏப்ரல் 1 முதல் அனைத்து முக்கிய வரி மாற்றங்களும் நடைமுறைக்கு வரும் வேளையில் மோடி அரசு இந்தியாவில் இருக்கும் MNC நிறுவனங்கள் தனது தாய் நிறுவனங்களுக்கு செலுத்தும் ராயல்டி தொகைக்கு வரியை உயர்த்தியதும் அமலுக்கு வருகிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிகோ இந்தியா, மற்றும் கோகோ கோலா இந்தியா போன்ற அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் தனது தாய் நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்துவதில் அதிக வரி விதிக்கப்பட உள்ளது.
நிதி மசோதா 2023
நிதி மசோதா 2023 அமலாக்கம் செய்வதன் மூலம் இந்தியா வெள்ளிக்கிழமை ராயல்டி மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணத்திற்கான withholding வரி விகிதத்தை 10% லிருந்து 20% வரை உயர்த்தி இரட்டிப்பாக்கியது.
வரி ஒப்பந்தம்
இந்த நடவடிக்கை மூலம் இந்தியா உடன் வரி ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் இந்திய கிளை நிறுவனங்களின் மீது 15 சதவீத வரியை அதிகப்படியாக விதிக்க முடியும். வரி ஒப்பந்தம் செய்யாத நாடுகளின் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
10 சதவீதம்
இதுநாள் வரையில் வரி ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவுக்கு ராயல்டி மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டண பகிர்வுக்கு 10 சதவீதம் மட்டுமே வரி செலுத்தி வந்த நிலையில், நிதி மசோதா 2023 வாயிலாக 15 சதவீதம் வரையில் வரி விதிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்தியாவின் பங்கு
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் பெறும் ஒட்டுமொத்த ராயல்டி பேமெண்ட்களில் இந்தியாவிடமிருந்து கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமான ராயல்டி கொடுப்பனவுகளைப் பெறுகின்றன. மேலும் இந்த நடவடிக்கை இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் நிறுவனங்களுக்கு பெரும் அடியாக உள்ளது.
ஜப்பான் மற்றும் கொரியா
இந்த 20 சதவீத வரி ஜப்பான் மற்றும் கொரியா நாட்டு நிறுவனங்களை பாதிக்காது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு இவ்விரு நாடுகள் உடன் double tax avoidance ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நாட்டு நிறுவனங்களுக்கு 10 சதவீத வரி செலுத்தினாலே போதுமானது.
வரி சலுகை கொண்ட நாடுகள்
மேலும் வரி சலுகை அதிகம் கொண்ட Cayman Islands, British Virgin Islands போன்ற நாடுகள் உடன் இந்தியா எவ்விதமான வரி ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில், இந்த நாடுகளில் தாய் நிறுவனத்தை கொண்டு இந்தியாவில் கிளை நிறுவனத்தை உருவாக்கி வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ராயல்டி மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டண பகிர்வுக்கு 20 சதவீத வரி கட்டாயம்.


Click it and Unblock the Notifications