உங்களுக்கு "சர்வர்" பிரச்னையா? பேமென்ட் ஸ்டக் ஆகிடுதா? கவலைய விடுங்க..இதோ வந்தாச்சு மொபிக்விக் வாலட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இப்போது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பேமென்ட் என்பது மிகவும் இயல்பாகிவிட்டது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் பேமென்ட செய்யப்படுவது தடைப்பட்டுவிடுகிறது. இதனை சரி செய்ய இந்தியாவின் பேமண்ட் செயலியான மொபிக்விக் (Mobikwik) வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை கொடுத்திருக்கிறது.

 

ஆன்லைன் பேமென்ட் என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. கையில் காசு கொடுத்து பொருள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகிறது. பொட்டிக்கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை இந்த ஆன்லைன் பேமென்ட் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் பேமென்ட்டில் UPI பேமென்ட்தான் மிகவும் எளிதானதாக இருக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் இதுவும் சொதப்பலை ஏற்படுத்திவிடுகிறது.

 
உங்களுக்கு

சர்வர் பிரச்னை காரணமாக பணம் போவது தாமதாகிவிடும் அல்லது பணம் போகவே போகாது. இதனால் முக்கியமான இடங்களில் இதனை பயன்படுத்துவதை சிலர் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பிரச்னையை போக்கதான் மொபிக்விக் (Mobikwik) வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சத்தை கொடுத்திருக்கிறது. இந்த புதிய அம்சம் மூலம் UPI பின் இல்லாமல் கூட பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

இதில் ஸ்பெஷல் என்னவெனில் சர்வர் பிரச்னை இருந்தாலும் கூட பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். மற்ற ஆப்களை போலவே இதிலும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இதை மேற்கொள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி UPI இருந்தால் போதுமானது. MobiKwik Wallet UPI மூலம் பணத்தை எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். Visa, MasterCard, Diners, Amex மற்றும் Rupay என் கார்டாக இருந்தாலும் அதனை MobiKwik Wallet UPI அதனை ஏற்றுக்கொள்ளும்.

வேகமான, எளிமையான அதேநேரத்தில் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையைதான் MobiKwik உருவாக்க விரும்புகிறது என்று இதன் இணை நிறுவனர் மற்றும் CEO பிபின் ப்ரீத் சிங் கூறியுள்ளார். MobiKwik வாலட்டில் பரிவர்த்தனைகளைத் தொடங்க, பயனர்கள் முதலில் தங்கள் தனிப்பட்ட வாலட் UPI ஐடி XXXXX@mbk ஐ உருவாக்க வேண்டும். கூகுள் பே, ஃபோன் பே, போன்றவற்றில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த MobiKwik Walletல் இருக்கிறது. எனவே இது நிச்சயம் பயன்படுத்த எளியதாக இருக்கும் என்று ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mobikwik wallet is now free from transaction block due to server issues

Online payment is now very common everywhere. But due to reasons including server problems, timely payment is blocked. To fix this, India's payment app Mobikwik has given a new feature to its customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X