இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான MobiKwik வைப்பு நிதிக்கு சுமார் 12 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது.
வங்கி வட்டி விகிதங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான வட்டி விகிதத்தை அளிக்கும் நிலையில் MobiKwik ஏற்கனவே தனது தளத்தில் நடைமுறையில் வைத்திருந்த XTRA என்னும் திட்டத்தைப் புதுப்பித்து Xtra Plus என்ற இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் MobiKwik தளத்தில் Xtra என்னும் திட்டத்தின் கீழ் Transactree Technologies Pvt Ltd உடன் இணைந்து இந்த முதலீட்டுத் திட்டத்தை அளிக்கிறது.
Xtra திட்டம்
இத்திட்டத்தின் விதிமுறைப்படி வைப்பு நிதிக்கு வருடம் 12 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது Xtra என்னும் திட்டத்தில் இருந்தது, ஆனால் Xtra Plus கீழ் 3 மாத லாக் இன் காலத்துடன் 12.99 சதவீதம் வரையில் வட்டி வருமானம் அளிப்பதாகவும், இதற்கு எவ்விதமான வித்டிராவல் கட்டணம், முதலீட்டுக் கட்டணம் இல்லாமல் பிக்சட் டெப்பாசிட் சேவை அளிக்கப்படுகிறது என நியூஸ்18 தெரிவித்துள்ளது.
ஆய்வு முக்கியம்
ஆனால் Xtra திட்டத்திற்கு 12 சதவீத வட்டி வருமானம் அளிப்பதாக MobiKwik தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமெனில் முழுமையாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். நிதியியல் முதலீடுகள் எப்போது சொந்தமாக மட்டுமே எடுக்க வேண்டும்.
Xtra Plus திட்டம்
MobiKwik தளத்தில் இந்த Xtra Plus திட்டத்தின் கீழ் முதலீடு செய்த பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பப் பெற்றால் எவ்விதமான வட்டியும் இருக்காது என்றும், முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை வித்டிரா செய்தால் 8 சதவீத வட்டி வருமானம் மட்டுமே அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 லட்சம் வரை
மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் குறைந்த பட்சம் 1000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையில் முதலீடு செய்து 12.99 சதவீத வட்டி வருமானத்தைப் பெற முடியும். இதேபோல் MobiKwik தளத்தில் இந்த Xtra Plus திட்டத்தில் நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐ-யிடம் இருந்து நெட் வொர்த் சான்றிதழ் வாங்க வேண்டும்.
18 வயது
இத்திட்டத்தில் 18 வயதிற்கு மேல் பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு கொண்ட அனைவரும் முதலீடு செய்யலாம். என்ஆர்ஐ-கள் NRO அக்கவுண்ட் வாயிலாக முதலீடு செய்ய முடியும்.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய பின்பு பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், இது 2 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள வைப்பு நிதிக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள்
இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி 7.10 சதவீத வட்டி வருமானம் வழங்கும் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. மேலும் வழக்கம் போல் அனைத்து வைப்பு நிதி காலத்திற்கும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதத்தில் கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications