52 லட்சத்தை தூக்கிய 13வயது மகள், அதிர்ச்சி அடைந்த குடும்பம்.. எதற்காக தெரியுமா..?!

இன்றைய இளம் தலைமுறையினர் மிகவும் சிறிய வயதிலேயே அனைத்து விதமான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கற்றுக்கொள்வது பெருமை அளிக்கும் விஷயமாக இருந்தாலும், பல நேரத்தில் 90 கிட்ஸ் போலவே வெகுளியாக ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடினாலே போதும் என பல பெற்றோர்கள் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஸ்மார்ட்போன் ஒன்று இருந்தால் போதும் எதைவேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலையில் பல சேவைகளை பெற டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு துவங்கி வங்கி கணக்கு, நெட்பேங்கிங் பாஸ்வோர்டு வரையில் போனில் வைத்துள்ளோம். இது பல நேரத்தில் நமக்கு பெரும் பிரச்சனையாக மாறும் என பலரும் பல முறை எச்சரித்த நிலையில், இங்கு ஒருவருக்கு பெற்ற மகளே வில்லியாக மாறியுள்ளார்.

52 லட்சத்தை தூக்கிய 13வயது மகள், அதிர்ச்சி அடைந்த குடும்பம்.. எதற்காக தெரியுமா..?!

சீனாவில் 13 வயதான சிறுமி போனில் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார், இந்த போன் சிறுமிக்கு சொந்தமானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த போனுடன் தான் இவர்களின் குடும்ப சேமிப்பு கணக்கு எப்படி இணைக்கப்பட்டது என்பது தான்.

13 வயதான சிறுமியின் பள்ளி ஆசிரியை அதிகப்படியான நேரம் போனில் மூழ்கியிருப்பதாகவும், ஆன்லைன் கேம்-க்கு அடிமையாகியிருக்கலாம் என சிறுமியின் பெற்றோர்-யிடம் எச்சரிக்கை செய்தனர். இதை தொடர்ந்து சிறுமியின் தாய் அவளுடைய போன்-ஐ செக் செய்த போது தான் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் தெரிய வந்துள்ளது.

இந்த 13 வயதான சிறுமி கடந்த 4 மாதத்தில் ஆன்லைன் கேம்-க்காக சுமார் 449500 யுவான் செலவு செய்துள்ளார், இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 52 லட்சம் ரூபாய். இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர்களின் குடும்ப கணக்கில் தற்போது வெறும் 0.5 யுவான் மட்டுமே உள்ளது, அதாவது 5 ரூபாய் மட்டுமே உள்ளது தெரிய வந்துள்ளது.

அதில் கடுப்பான தாய் தனது மகளின் செயலை பிற பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் சமுக வலைத்தளத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது சீனா, ஹாங்காங் தாண்டி உலகளவில் பிரபலமாகியுள்ளது.

13 வயதான சிறுமி செலவு செய்த 52லட்சம் ரூபாயில் கிட்டதட்ட 14 லட்சம் ரூபாயை கேம் வாங்குவதற்காகவும், 24 லட்சம் ரூபாயை in-game purchase-க்காகவும், 11.61 லட்சம் ரூபாயை தனது சக வகுப்பை சேர்ந்த 10 நண்பர்களுக்கு கேம் வாங்கி கொடுப்பதற்காக செலவு செய்துள்ளார்.

ஒரு குடும்பத்தின் பல வருட சேமிப்பு 4 மாதத்தில் சூறையாடியுள்ளார் இந்த 13 வயது சிறுமி. இந்த சிறுமியின் போனுக்கு எப்படி குடும்ப கணக்கின் அக்கவுன்ட் இணைக்கப்பட்டது என்ற கேள்வி மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

குடும்ப கணக்கின் டெபிட் கார்ட் வீட்டில் பத்திரமாக வைக்காமல் இருந்துள்ளது, இதை எடுத்து சிறுமி தன்னுடைய போனில் விளையாட்டாக இணைத்துள்ளார், இந்த கணக்கின் பாஸ்வோர்டு-ம் இச்சிறுமிக்கு தெரியும்.

பெற்றோர்கள் வீட்டில் இல்லாத போது இந்த கார்டு-ஐ பயன்படுத்திகொள்ள பாஸ்வோர்டு சிறுமியிடம் பெற்றோர்கள் பகிர்ந்துள்ளார்கள். இது அனைத்தும் சிறுமிக்கு சாதகமாக அமைந்த நிலையில் 52 லட்சம் ரூபாயை வெறும் 4 மாதத்தில் தீர்த்துள்ளார் 13 சிறுமி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+