இந்திய தொலைதொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் தொலைதொடர்பு சேவை வழங்கி வந்தாலும் ஏர்டெல் , ஜியோ உள்ளிட்டவை தங்களுடைய நவீன நெட்வொர்க்களோடும் 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியோடும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டுள்ளன.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் அதிக பயனாளர்களோடு முதலிடத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் இரண்டாவது இடத்தில் ஏர்டெல் நிறுவனமும் இருக்கிறது . அடுத்ததாக வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக பயனாளர்களைக் கொண்ட ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனமாக இருக்கிறது.

இந்த தனியார் நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்திற்குள் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் இந்த நிறுவனங்கள் 15 லிருந்து 25 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தன.இந்த சூழலில் 2 ஆண்டுகள் கழித்து வரும் மேலும் 15 சதவீதம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப் போகின்றன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெஃப்ரீஸ் நிறுவனம் இந்திய தொலை தொடர்பு துறை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15 சதவீதம் வரை உயரும் என குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களை முன் வைத்திருக்கிறது.
முதலில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு ஐபிஓ வெளியீடு செய்கிறது. ஐபிஓ வெளியீடு செய்யும்போது ஒட்டு மொத்த தொலைதொடர்பு துறையின் மொத்த மதிப்பே அதிகமாகும். இது இந்த தொலை தொடர்பு சேவைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது. ஏராளமான மக்கள் தற்போது அதிகளவில் டேட்டா பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் இதன் காரணமாக நிறுவனங்கள் தங்களுடைய டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களுக்கு ஏற்கனவே முழுக்கு போட்டு விட்டன. தற்போது டேட்டா அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களுக்கு தான் முன்னுரிமை தருகின்றன.
ஏராளமான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் அவர்களும் இது போன்ற திட்டங்களுக்கு தான் ரீசார்ஜ் செய்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவில் டேட்டா பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. எனவே இந்த நிறுவனங்கள் மக்களை 5ஜி டேட்டா பயன்பாட்டை நோக்கி தள்ளுவதற்கு கட்டணங்களை உயர்த்தும் என தெரிவிக்கிறது. மக்கள் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் உயரும். 2026ஆம் ஆண்டில் இது 7 சதவீதமாகவும் 2027 ஆம் ஆண்டில் 16 சதவீதம் என்றும் உயருமாம். ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறும் என சொல்லப்படுகிறது.ஜியோ நிறுவனம் 10- 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வோடபோன் ஐடியா ஏற்கனவே பல்வேறு கடன் நிலுவை பிரச்சனைகளில் இருப்பதால் 2030-ம் தேதி ஆண்டுக்குள் 40 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்துமாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications