நாடு முழுவதும் நாளை 77வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். குடியரசு தின கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையிலான பல்வேறு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார வாகன அணி வகுப்பு மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை பறைசாற்றக்கூடிய விஷயங்கள், அதிநவீன தயாரிப்புகள் உள்ளிட்டவை பல்வேறு துறை அமைச்சகங்களாலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குடியரசு தின அணிவகுப்பு என்பது ஒட்டுமொத்த நாடு மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி.

பிரிட்டிஷ் காலத்து பாரம்பரியத்தை பின்பற்றி ரெய்ஷினா ஹில்ஸ் பகுதியில் தொடங்கக்கூடிய இந்த அணி வகுப்பு இந்தியா கேட் வழியாக சென்று செங்கோட்டையில் நிறைவு பெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிப்பார்கள்.
இந்தியா குடியரசு தினம் கொண்டாடத் தொடங்கியது முதலே ஒவ்வொரு ஆண்டுமே பிரம்மாண்டமான முறையில் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்பது நடத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்காக 320 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது. ஆனால் அண்மை காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.ஆனால் நிச்சயமாக இது ஆயிரம் கோடி ரூபாயை தொட்டிருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல் குடியரசு தின கொண்டாட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்தது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 1950 ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய முதல் குடியரசு நாளை கொண்டாடியது. அப்போது 11,093 ரூபாய் செலவில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். 1956 ஆம் ஆண்டில் இது 5,75,000 ரூபாய் என உயர்ந்தது .1971 ஆம் ஆண்டில் 17 லட்சம் ரூபாய் என அதிகரித்தது 1973 ஆம் ஆண்டில் 23 லட்சம் என்றும் 1988 ஆம் ஆண்டில் 69 லட்சம் ரூபாய் என்று உயர்ந்ததாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.
முதல் குடியரசு தின கொண்டாட்டம் என்பது மிக எளிமையாகவே நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் எளிமையான முறையில் அணிவகுப்பு நடந்தது. மேஜர் தயான் சந்த் மைதானம் என அறியப்படும் இடத்தில் தான் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் குடியரசு தின அணிவகுப்பை காண இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து இந்தியா அப்போது தான் மீண்டு வந்து கொண்டிருந்தது, எனவே நிவாரண முகாம்களிலும், ஊரக பள்ளிகளிலும் தான் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொம்மைகள் வழங்கப்பட்டன. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதில் தான் அரசு கவனம் செலுத்தியது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications