25 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக சாதனை படைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் ஆட்சிக்கு தலைமை வகித்த தலைவர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. குஜராத் முதலமைச்சராக பதவியேற்றது முதல் நாட்டின் பிரதமராக ஆட்சி நடத்தி வருவது வரை, தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராக மோடி பதவியேற்றார். பின்னர் தொடர்ச்சியாக குஜராத் மாநில முதலமைச்சராக தொடர்ந்து 13 ஆண்டுகள் பதவி வகித்த அவர் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்தார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து முதன்முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இத்தனை ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என பார்க்கலாம்.

25 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?

2007ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது நரேந்திர மோடி சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு 40 லட்சம் ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து 2012 குஜராத் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது, அவரது சொத்து மதிப்பு 1 கோடி ரூபாயை தாண்டியது. காந்திநகர் என்ற இடத்தில் இவர் வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

2014 மக்களவை தேர்தலில் முதன்முறையாக பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டபோது, சொத்து மதிப்பு விவரங்களை தாக்கல் செய்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1.65 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். அதுவே 2019 மக்களவை தேர்தலில் மோடியின் மொத்த சொத்து மதிப்பு 2.51 கோடியாக உயர்ந்தது.

Also Read

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது மோடியின் சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாயாக அதிகரித்தது. அப்போது சொந்தமாக நிலங்களோ, வீடுகளோ அல்லது வாகனங்களோ இல்லை, பெரும்பாலான சொத்துகள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிலையான வைப்புநிதிகளாக மட்டுமே உள்ளன.

பிரதமர் அலுவலகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 4.02 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மோடியிடம் காந்திநகர் எஸ்பிஐ வங்கி கிளையில் நிலையான வைப்புநிதிகளாக 3,79,76,101 ரூபாய் உள்ளது.

Recommended For You

கையில் ரொக்கமாக 34,429 ரூபாய் இருக்கிறதாம், தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீடுகள் 10,24,724 ரூபாயாக உள்ளன. பிரதமர் மோடியிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. இவை தோராயமாக 45 கிராம் எடை கொண்டவை மற்றும் இவற்றின் சந்தை மதிப்பு 4,58,864 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவுறும் சூழலில், சொந்தமாக நிலம், வாகனம் எதுவும் இல்லை. வங்கி டெபாசிட் , தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் மிக குறைந்த அளவிலான தங்கம் மட்டுமே தனது சொத்தாக கொண்டு தான் ஒரு எளிய தலைவர் என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+