வெள்ளிக்கிழமை எக்சிட் போல் வெளியானதில் இருந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் திட்டம் தீட்டத் துவங்கியுள்ளனர். எக்சிட் போல் முடிவுகளுக்கு பின் மும்பை பங்குச்சந்தையின் ரியாக்ஷனை பார்க்க முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதேவேளையில் பிஜேபி பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்பு வெளியான எக்சிட் போல் முடிவுகள் தற்போதும் ஆளும் கட்சியான பிஜேபி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்குப் பெரிய அளவில் ஆதரவாக உள்ளது. பெரும்பாலான முடிவுகளில் NDA கூட்டணி குறைந்தது 300 சீட்டுகளுக்கு அதிகமாக வெற்றிபெறும் எனக் கணித்துள்ளது.

இதனால் மோடி 3.0 ஆட்சி அமைவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவே நம்புகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் வெற்றியை கொண்டாட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பாரத மண்டபம் அல்லது கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய "அரசியல்" நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பின்பு பெரிய விழா நடத்த திட்டமிட்டுள்ள பிஜேபி. இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த சிறப்பு விழாவில் 8,000-10,000 அதிகமான பிஜேபி கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளுக்கு முன்னதாகவே மே 28 அன்று, ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு, உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரங்களுக்கான டெண்டரை குடியரசு தலைவர் செயலகம் வெளியிட்டு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள இந்த டெண்டர் மதிப்பு 21.97 லட்சம் ரூபாயாகும். இந்த டெண்டர் ஜூன் 3 திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. ஆர்டரை முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் மற்றும் தங்கும் தேவைகளையும், செலவுகளை லோக் சபா செயலகம் கையாண்டு வருவதால், குடியரசுத் தலைவர் செயலகம் உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரங்களுக்கான செலவுகளை ஏற்கிறது.
2024 மக்களவைத் தேர்தலின் எக்சிட் போல் விபரத்தின் படி பாஜக மாபெரும் வெற்றி அடைவதாகக் கூறினாலும், அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி தலைவர்கள் குறைந்தபட்சம் 295 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறி எக்சிட் போல் முடிவுகளை மறுத்துவிட்டனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications