2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறையினர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். வரும் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நிதி கொள்கைகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் இருக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் சற்று அதிகரித்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்ற மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை இந்த பட்ஜெட் கொண்டிருக்கும். ஜூலை 23-ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒன்றிய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தாலும், இது எப்போதும் இப்படி இல்லை என்பது சிலருக்குத் தெரியாது. முன்னதாக, பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
முந்தைய பட்ஜெட் தாக்கல் நேரம்:1999-ஆம் ஆண்டு வரை, காலனித்துவ காலத்தில் இருந்து வந்த வழக்கப்படி, மத்திய பட்ஜெட் மக்களவையில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், பிரிட்டிஷ் அரசாங்கம் லண்டனிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடிந்தது.
இங்கிலாந்தை விட இந்தியா 5 மணி நேரம், 30 நிமிடங்கள் முன்னால் உள்ளது. இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் காலை 11:30 GMT என்பது மாலை 5 மணிக்கு சமமாக இருந்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நேரம் மாற்றப்படவில்லை. முந்தைய அரசுகள் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கவழக்கங்களை பின்பற்றின.
பட்ஜெட் தாக்கல் புதிய நேரம்: 1999 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் நிர்வாகத்தின் கீழ் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவினால் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மாலை 5 மணி வழக்கம் முதல் முறையாக மாற்றப்பட்டது.
இந்த மாற்றம் பல காரணங்களுக்காக மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனது சொந்த நேர மண்டலத்தைப் பின்பற்ற ஆரம்பித்தது. அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்து விவாதிக்க அதிக நேரம் வழங்குவதற்காகவும் அரசு காலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதை நடைமுறைப்படுத்தின.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications