ஜூலை 22 மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல்..? இந்த பட்ஜெட்டில் யாருக்கு முக்கியத்துவம்..?

நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராகியிருக்கும் வேளையில், NDA கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டை 2வது முறையாக நிதி அமைச்சராக பதவியேற்றியுள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் தாக்கல் மூலம் அவர் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார்.

ஜூலை 22 மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல்..? இந்த பட்ஜெட்டில் யாருக்கு முக்கியத்துவம்..?

இந்த வாரம் மோடி 3.0 அரசு இந்த பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத் தொடரை 2 முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது இரண்டாகப் பிரித்து நடத்துவதாக என்ற ஆலோசனை நடந்து வந்தது. தற்போது ஜூலை 22 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சரி இடைக்கால பட்ஜெட்-ஐ தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் அறிக்கையில் எந்த துறைக்கும், எந்த கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்..? ஒரு சிறிய அலசல்.

வேளாண்மைத் துறை சவால்களைக் கையாள்வது: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், வேளாண்மைத் துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் கட்டாயம் அறிவிக்கப்படலாம். பருவமழையில் பெரிய அளவில் மாற்றம் இருப்பதால் உணவு பணவீக்கத்தைக் குறைக்கக் கட்டாயம் விவசாய துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்குதல்: இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம். கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் உள்ளது குறித்து அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு உற்பத்தி இணைப்பு ஊக்கத்திட்டத்தை (PLI) விரிவுபடுத்துவது பற்றிய அறிவிப்பு இருக்கலாம்.

மூலதன செலவினங்கள்: நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.

வருவாய் வளர்ச்சியை அதிகரித்தல்: 2025ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதற்காக, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.

ஜிஎஸ்டி (GST) எளிமைப்படுத்தல்: வணிகர்களுக்கான வரி செலுத்தும் சுமையைக் குறைப்பதற்காக ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம்.

100 நாள் செயல் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையினுக்கு உத்தரவிட்ட 100 நாள் செயல் திட்டத்தின் சில முக்கிய விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் பிரதானமாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குப் பகுதி வளர்ச்சி: 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்படலாம்.

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை நோக்கிய பயணத்தில், இந்த மாநிலங்களை வளர்ச்சி இயந்திரங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.

இடைக்கால பட்ஜெட்: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளில் அரசு கவனம் செலுத்தியது.

இந்த நிலையில் தற்போது முழு பட்ஜெட் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+