டெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்றிருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜூலை மாத இறுதியில் அவர் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தார்.

தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி மீண்டும் மோடி அரசு பொறுப்பேற்று இருக்கும் நிலையில் முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்பை காட்டிலும் குறைவான இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி தயவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றே கூறலாம்.
இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்கள் தங்களுக்கு வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே மத்திய அரசு வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மிடில் கிளாஸ் மக்களுக்கு நல்ல நல்ல தகவல் கிடைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3.0 அரசாங்கம் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நுகர்வு ஊக்க நடவடிக்கைகளை தூண்டும் வகையிலான அறிவிப்புகளை பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.
மேலும் குறைந்த வருமானம் பெறும் தனிநபர்களுக்கு சில சாத்தியமான வரி குறைப்புகளும் இதில் இடம்பெற கூடும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் வரி செலுத்துவோருக்கான வரி அடுக்குகளை குறைப்பதற்கான திட்டங்களையும் நிதி அமைச்சக அதிகாரிகளும் மதிப்பீடு செய்து வருவதாக ப்ளூம்பெர்க் செய்தியில் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதாவது வருடத்திற்கு 5 - 10 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்களும் இதன் மூலம் பயனடையலாம் என சொல்லப்படுகிறது. தற்போது அவர்களுக்கு 5 - 20% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. எனவே இதில் மாற்றங்களை கொண்டு வந்து கூடுதலாக ஒரு புதிய வரி அடுக்கு அறிமுகம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
தற்போது விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் நீதி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை 8,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்தினார்.
அதே போல பல்துறை நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு தான் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை கூட்டணி அரசு அமைந்திருப்பதால் சில மக்கள் நல அறிவுப்புகள் கூட வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications