எக்சிட் போல் முடிவுகள் மக்கள் மத்தியிலும், பொருளாதாரம், வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் சமுக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இப்போதே மோடி ஆட்சி அமைத்துவிட்டதாக நம்ப துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாகவே திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத, கணித்திடாத வகையில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது முறை ஆட்சியில் RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா-வின் ஆட்சியில் தனது முக்கியமான எதிர்பார்ப்புகளை டிவிட்டரில் பட்டியலிட்டு உள்ளார்.
பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றியை பெறும் என்பதை எக்சிட் போல் வாயிலாகத் தெரிய வந்த நிலையில் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வேளையில் RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா-வின் ட்வீட் பல தொழிலதிபர்களின் சொந்த வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சுகாதாரம் மற்றும் கல்வி முதல் எரிசக்தி மற்றும் காலநிலை முயற்சிகளில் வரையில் அதிக முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா X பதிவில், வரவிருக்கும் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பத்து எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டார்.
1. ஒரே நாடு, ஒரே தேர்தல்
2. யூனிபார்ம் சிவில் கோட்
3. விவசாய சீர்திருத்தங்கள்
4. உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள்
5. டிஜிட்டல் மயமாக்கலுக்குக் கூடுதல் ஊக்குவிப்பு
6. சுகாதாரம் மற்றும் கல்வியைச் சேவைகளை விரிவுபடுத்துதல்
7. நாட்டில் வேலை உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
8. தொழிலாளர் சீர்திருத்தங்கள்
9. எனர்ஜி மற்றும் கிளைமேட் பிரிவில் அதிக முதலீடுகள்
10. இந்தியாவின் உலகளாவிய ப்ரோபைல்-ஐ பெரிய அளவில் வளர்த்தல் ஆகியவை தனது டாப் 10 எதிர்பார்ப்பாக இருப்பதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா X பதிவுக்குச் சிலர் பதில் அளித்துள்ளனர், ஒரு பயனர் மேலும் ஐந்து எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டார்,
11. மீண்டும் மீண்டும் வங்கிகள் KYC கேட்பதை நிறுத்துங்கள்
12. மீம்ஸ் போட்டால் சிறை இல்லை
13. வாட்ஸ்அப்பில் குட்மார்னிங் செய்திகளுக்கு முழுமையான தடை
14. ஒரு நபர் குடித்துவிட்டு அல்லது சோகமாக இருக்கும்போது முட்டாள்தனமான எதையும் வாங்குவதை நிறுத்தும் வகையில் UPI மேம்படுத்த வேண்டும்
15. உலகக் கோப்பை கோப்பை

மற்றொரு நபர் செய்த ட்வீட்டில்
1. ஏமாற்றுவதை நிறுத்துங்கள்
2. தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
3. தவறான மற்றும் புனையப்பட்ட தரவுகளை உலகிற்கு வழங்குவதை நிறுத்துங்கள்.
4. மற்றவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும்.
5. நாசீசிஸ்டிக் போக்குகளை நிறுத்தவும்.
6. டெலிப்ராம்ப்டர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
7. உள்ளூர் பிஜேபி கட்சி அலுவலகத் தலைவரைப் போல் இல்லாமல் பிரதமரைப் போல நடந்து கொள்ளுங்கள். என ட்வீட் செய்துள்ளார்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications