சென்னை, ஜூன் 21, 2024: மோடி தலைமையிலான மூன்றாவது முறையாக அமைக்கப்பட்டுள்ள ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் அடுத்த ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வேளையில், இந்த முழு பட்ஜெட் அடுத்த 5 வருட மோடி ஆட்சியின் ரோட் மேப் ஆக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் விரும்பும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதி துறை உட்பட முதன்மை துறைகளில் நான்கு அமைச்சர்களின் பதவி மாற்றமில்லாமல் இருப்பது, மோடி அரசின் முந்தைய ஆட்சியின் கொள்கைகளை 3.0 ஆட்சியிலும் தொடரும் என்பதை வலியுறுத்துகிறது. பல சாத்தியங்கள் இருந்தாலும், இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா..?

இந்த பட்ஜெட்டில் மோடி அரசு அதிகம் கவனம் செலுத்தப்படுவது எது? கூட்டணிக் கட்சிகள் விரும்பும் நலத்திட்டங்கள் மற்றும் மக்களை ஈர்க்கும் திட்டங்களா, இல்லை பொருளாதார கொள்கைகளின் தொடர்ச்சியா? தேர்தல் சரிவைப் பங்குச்சந்தை மொத்தமாக மீண்டு வந்துள்ள வேளையில் இந்த பட்ஜெட் தான் அடுத்த 5 வருடப் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை தீர்மானிக்கப்போகிறது என்பதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கட்டாயம் இந்த பட்ஜெட்டை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பட்ஜெட் 2024 இல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பட்டியல்:
மக்கள் சார்ந்த திட்டங்கள்: மக்களின் வருமானத்தை அதிகரிப்பது, வேவைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்தைச் சீரமைப்பது போன்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி 3.0 அமைச்சரவை நாட்டின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. இதன் வாயிலாக குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs), Micro-finance மற்றும் சிறு தொழில்களில் முதலீட்டை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
இந்திய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை முக்கியமானதாக இருக்கும், இதற்காக புதிய வேலைவாய்ப்புகளையும், அனைத்து தரப்பு மக்களுக்குமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் நகர வீட்டு வசதி திட்டங்களை ஊக்குவிக்கும் மானியத் திட்டங்கள் விரிவாக்கம் செய்யவோ அல்லது கூடுதல் தொகையை ஒதுக்கவோ வாய்ப்புகள் உள்ளது. சுவாரசியமாக, ஜூன் 10 ஆம் தேதி நடந்த மோடி 3.0 அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் வீட்டுத் துறை மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகப் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் சுமார் 3 கோடி வீடுகளுக்குக் கட்டுமான மானியத்தை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பொருளாதார கொள்கைகளின் தொடர்ச்சி: நிதியமைச்சகம் உள்ளிட்ட முக்கிய நான்கு துறைகளுக்கான அமைச்சர் பதவிகள் மாற்றமின்றி இருப்பது, அரசு பொருளாதார கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.
பொது மூலதனச் செலவு (Public Capital Expenditure): ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.2.1 லட்சம் கோடி லாப ஈவு கிடைத்ததுடன் வலுவான வரி வருவாய் இருப்பதையும் கருத்தில் கொண்டு, 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பொது மூலதனச் செலவு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சஞ்சீவ் புரி பேசுகையில், பொது மூலதனச் செலவுகளில் வருடாந்திர அடிப்படையில் 25% அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் வேலைவாய்ப்பு வளர்ச்சியையும் பராமரிக்க, அரசின் பொது மூலதனச் செலவு அதிகரிக்கலாம் என்று பல பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
2025 இடைக்கால பட்ஜெட், 2024 நிதியாண்டின் திருத்த அளவுகளை ஒப்பிடுகையில் மத்திய அரசு முன்பு பொது மூலதனச் செலவை 16.9% அதிகரித்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி பற்றாக்குறை குறைப்பு: ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஈவுத்தொகை அரசாங்கத்திற்குக் கடன் பெறுவதைக் குறைப்பதற்கும் 2025 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.1 சதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் அளித்த அறிக்கையின்படி, 2025-26 ஆம் ஆண்டிற்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதமாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான முதலீட்டு அறிவிப்புகளை அதிகம் கொண்டிருக்குமா அல்லது மக்களைக் கவரும் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதேபோல இந்த பட்ஜெட் அறிவிப்புகள் தான் முதலீட்டாளர்களுக்கான கோனார் கைய்டு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications