டெல்லி: இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக சக்தி வாய்ந்த பல அதிகாரங்களை படைத்த முக்கியமான ஒரு பதவி ஆகும். இந்த பதவியை நீண்ட காலம் அலங்கரித்த பெருமை ஒரு சிலருக்கே உண்டு. அந்த பட்டியலில் பிரதமர் மோடி முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.
பிரதமர் மோடி சாதனை: நீண்ட காலம் இந்திய பிரதமராக பதவி வகித்த இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி . முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பின்னுக்கு தள்ளி மோடி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் . மோடி 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி இந்திய பிரதமராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தேர்தல், 2024 ஆம் ஆண்டு தேர்தல் என தொடர்ச்சியாக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார்.

நீண்ட நாட்கள் பிரதமர் பதவி: நீண்ட நாட்கள் இந்திய பிரதமர் பதவியை அலங்கரித்த நபர்களின் பட்டியலில் இந்திரா காந்தியை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறார். ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி பார்க்கும்போது 4078 நாட்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் மோடி பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார் .

முதலிடத்தில் நேரு: இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜவஹர்லால் நேரு . இவர் தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் 288 நாட்கள் இடைவெளியே இல்லாமல் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் இந்திய பிரதமர் பதவியை நீண்ட நாட்கள் அலங்கரித்த நபர் என்ற பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உள்ளது.
இந்திராவை பின்னுக்கு தள்ளிய மோடி: இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 4077 நாட்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். இதில் மூன்றாவது இடத்தில் இருந்த பிரதமர் மோடி இந்திரா காந்தியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்.

6 முறை தேர்தலில் வெற்றி: அதேபோல பிரதமர் மோடி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர், காங்கிரஸ் அல்லாத வேறு கட்சியில் இருந்து வந்து நீண்ட காலம் இந்திய பிரதமர் பதவி வகிக்கும் நபர் என்ற பெருமையும் மோடிக்கு உண்டு. மத்திய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி தொடர்ந்து ஆறு முறை தேர்தலில் வெற்றி பெற்று தலைமை பதவிக்கு வந்த ஒரு நபர் என்ற வரலாறும் மோடிக்கு உண்டு.
24 ஆண்டுகள் தலைமை பதவி: நரேந்திர மோடி கிட்டத்தட்ட 24 ஆண்டு காலம் மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி அரசாங்கத்தை வழி நடத்திய நபராக இருக்கிறார். 2002,2007 மற்றும் 2012 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர் மக்களவை தேர்தலில் களம் கண்டு மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு மக்களவை தேர்தலில் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பிரதமர் என்ற பெருமையும் நரேந்திர மோடிக்கு கிடைத்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications