தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக மதுரை நகரம் இருக்கிறது. மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில் திகழ்கிறது. இதை தாண்டி மதுரை தற்போது வேலைவாய்ப்பு ரீதியாகவும் ஐடி நிறுவனங்களுக்கான நகரமாகும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அந்த வகையில் மதுரை நகரின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையிலான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதன் மூலம் தென் தமிழக பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் 28.8 கோடி ரூபாய் மதிப்பிலான சுற்றுசாலை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் டெண்டர் கோரி இருந்தது. இந்த சூழலில் தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை தந்திருக்கிறது.

தற்போது மதுரை விமான நிலையம் என்பது கஸ்டம்ஸ் ஏர்போர்ட் என்ற விமான நிலைய பிரிவின் கீழ் இருக்கிறது. அதாவது உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் மட்டுமே மதுரை விமான நிலையத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடியும். ஆனால் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் போது வெளிநாட்டை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களும் இனி நேரடியாக மதுரைக்கும் மதுரையிலிருந்தும் வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை இயக்க முடியும்.
நீண்ட காலமாகவே மதுரை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களை விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்த நல்ல செய்தியை தந்து இருக்கிறது.
அடுத்தகட்டமான சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்ற அனைத்து உள்கட்டமைப்புகளும் மதுரை விமான நிலையத்தில் கொண்டுவரப்படும். ஓடு பாதை விரிவாக்கம் செய்யப்படும், புதிய முனையங்கள் அமைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் தமிழகம் வர இருக்கக்கூடிய சூழலில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான முடிவினை மத்திய அமைச்சரவை அறிவித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை திருச்சிக்கு வருகை தந்து 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications