டெல்லி: பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசு மக்களைக் கவரும் வகையில் பல முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் மாநில வாரியாக, பிராந்திய வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் பெரும் பகுதி அரசு ஊழியர்களையும், சாமானிய மக்களையும் கவரும் இரு முக்கியமான திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்துவதற்கான முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என ஈடி நவ் வெளியிட்டுள்ளது. இத்தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
50 சதவீதம்: மத்திய அமைச்சரவை இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகிய இரண்டும் 50 சதவீதத்தை எட்டும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களுக்குக் கூடுதல் சம்பளமும், கூடுதல் பென்ஷன் தொகையும் கிடைக்கும்.
LPG மானியம்: இதைத்தொடர்ந்து மத்திய அரசு சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை (LPG subsidy scheme) அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் ஈடி நவ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை ரூ.300 ஆக உயர்த்தியது மத்திய அரசு.
உஜ்வாலா யோஜனா திட்டம்: இந்த மானிய திட்டத்தை அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அரசு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாகச் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.1,650 கோடி செலவிடப்பட உள்ளதாக முன்பு மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
நுகர்வோர் விலை குறியீடு: அகவிலைப்படி உயர்வின் அளவை தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்த நிலையில் கடந்த 12 மாதங்களுக்கான சராசரி 392.83 புள்ளிகளாகும்.
தொழிலாளர் அமைச்சகம்: இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50.26 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் ஆய்வு அலுவலகம் (Labour Bureau) ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI-IW) தரவுகளை வெளியிடுகிறது.
ஜனவரி மற்றும் ஜூலை: அகவிலைப்படி என்பது ஊழியர்களுக்கானது, அகவிலை நிவாரணம் என்பது ஓய்வூதியர்களுக்கானது. ஒவ்வொரு ஆண்டும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் இரண்டு முறை உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: கடைசியாக அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது, அப்போது அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பணவீக்க எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசு வெளியிட உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications